தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3351

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அங்கு இப்ராஹீம்(அலை) அவர்களின் உருவப் படத்தையும் கண்டார்கள். உடனே, இந்தக் குறைஷிகளோ உருவம் உள்ள வீட்டில் (இறை கருணையைக் கொணரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்களே! இது இப்ராஹீமின் உருவம்.

(இதில், அவர் தம் கையில் இருக்கும் அம்புகளால்) குறி சொல்பவராக நிற்கிறாரே அவருக்கென்ன? (அவருக்கும் குறி சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?)’ என்று கூறினார்கள்.
Book :60

(புகாரி: 3351)

حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ البَيْتَ، فَوَجَدَ فِيهِ صُورَةَ إِبْرَاهِيمَ، وَصُورَةَ مَرْيَمَ، فَقَالَ «أَمَا لَهُمْ، فَقَدْ سَمِعُوا أَنَّ المَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ، هَذَا إِبْرَاهِيمُ مُصَوَّرٌ، فَمَا لَهُ يَسْتَقْسِمُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.