தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3372

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், இப்ராஹீமின் விருந்தாளிகளைப் பற்றியும் இவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருந்தாளிகள்,உங்கள் மீது சாந்தி நிலவுவதாக! என்று கூறி அவரிடம் வந்த போது, உங்களைக் குறித்து எங்களுக்கு பயமாக இருக்கிறது என்று அவர் கூறினார். அதற்கு அவர்கள், நீங்கள் அஞ்ச வேண்டாம். ஞானமுள்ள ஒரு குழந்தையைப் பற்றிய நற்செய்தியை உங்களுக்கு நாங்கள் அறிவிக்கின்றோம் என்று பதில் கூறினார்கள். (திருக் குர்ஆன் 15:51-53)

(நினைவு கூருங்கள்:) என் இரட்சகனே! இறந்தவர்களை நீ எப்படி உயிராக்குகின்றாய் என்பதை எனக்குக் காட்டு என்று இப்ராஹீம் கூறிய போது, நீங்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? என்று (அல்லாஹ்) கேட்டான். (அதற்கு) அவர், ஆம்; (நம்பிக்கை கெண்டுள் ளேன்.) ஆயினும், என் உள்ளம் நிம்மதியடைவதற்காக (இப்படிக் கேட்டேன்) என்று சொன்னார். (2:260)

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறந்துவிட்டவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் நாமே இப்ராஹீம் (அலை) அவர்களை விடவும் சந்தேகம் கொள்ள அதிகத் தகுதி யுடையவர்கள் ஆவோம். (எனவே, சந்தேகப் பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை.

திருக்குர்ஆனின் படி,) இப்ராஹீம(அலை) அவர்கள், ‘என் இறைவா! நீ இறந்தவர்களை எப்படி உயிராக்குகிறாய் என்று எனக்குக் காட்டு’ என்று கேட்டபோது அல்லாஹ்? ‘நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?’ என்று கேட்டான். அவர்கள், ‘ஆம்; (நம்பிக்கை கொண்டுள்ளேன்.) ஆனாலும், என் உள்ளம் நிம்மதியடைவதற்காக இப்படிக் கேட்டேன்’ என்று பதிலளித்தார்கள்.

லூத்(அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக! அவர்கள் வலுவான ஓர் ஆதரவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள்.. யூசுஃப்(அலை) அவர்கள் சிறையில் கழித்த அளவிற்கு நீண்ட காலத்தை நான் கழிக்க நேர்ந்திருந்தால் (விடுதலையளிக்க அழைத்தவரிடம் (அவரின் அழைப்பை ஏற்று விடுதலையாகிச் செல்ல) ஒப்புக் கொண்டிருப்பேன். என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book : 60

(புகாரி: 3372)

بَابُ قَوْلِهِ عَزَّ وَجَلَّ: {وَنَبِّئْهُمْ عَنْ ضَيْفِ إِبْرَاهِيمَ إِذْ دَخَلُوا عَلَيْهِ} [الحجر: 52]

الآيَةَ لاَ تَوْجَلْ لاَ تَخَفْ، وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ {رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي المَوْتَى} [البقرة: 260] الآيَةَ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَسَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

نَحْنُ أَحَقُّ بِالشَّكِّ مِنْ إِبْرَاهِيمَ إِذْ قَالَ: {رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي المَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي} [البقرة: 260]

وَيَرْحَمُ اللَّهُ لُوطًا، لَقَدْ كَانَ يَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ، وَلَوْ لَبِثْتُ فِي السِّجْنِ طُولَ مَا لَبِثَ يُوسُفُ، لَأَجَبْتُ الدَّاعِيَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.