பாடம் : 17
அல்லாஹ் கூறுகிறான்: ஸமூத் குலத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை நாம் (நம் தூதராக) அனுப்பி வைத்தோம். (7:73) 53
மேலும், அல்லாஹ் கூறுகிறான்: ஹிஜ்ர் வாசிகள் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள். (15:80) ஹிஜ்ர் என்பதற்கு விலக்கப்பட்டது, கட்டடம், பெண்குதிரை, அறிவு முதலான பொருட்கள் இருந்தாலும் இங்கே ஸமூத் கூட்டத்தார் வசித்த இடத்தையே அது குறிக்கும்.
அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) கூறினார்
(ஸாலிஹ் – அலை- அவர்களின் தூதுத்துவத்திற்குச் சான்றாக வந்த) ஒட்டகத்தை (அதன் கால் நரம்புகளை) வெட்டிக் கொன்றவனை நினைவு கூர்ந்தபடி நபி(ஸல்) அவர்கள், ‘ஸாலிஹ் உடைய சமுதாயத்தில் அபூ ஸமஆவைப் போல் மதிப்பும் வலிமையும் வாய்ந்த ஒரு மனிதன் அதைக் கொல்ல ஒப்புக் கொண்டு முன்வந்தான்’ என்று கூறினார்கள்.
Book : 60
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا} [الأعراف: 73]
{كَذَّبَ أَصْحَابُ الحِجْرِ} [الحجر: 80] الحِجْرُ: «مَوْضِعُ ثَمُودَ» وَأَمَّا {حَرْثٌ حِجْرٌ} [الأنعام: 138]: حَرَامٌ، وَكُلُّ مَمْنُوعٍ فَهُوَ حِجْرٌ مَحْجُورٌ، وَالحِجْرُ كُلُّ بِنَاءٍ بَنَيْتَهُ، وَمَا حَجَرْتَ عَلَيْهِ مِنَ الأَرْضِ فَهُوَ حِجْرٌ، وَمِنْهُ سُمِّيَ حَطِيمُ البَيْتِ حِجْرًا، كَأَنَّهُ مُشْتَقٌّ مِنْ مَحْطُومٍ، مِثْلُ قَتِيلٍ مِنْ مَقْتُولٍ، وَيُقَالُ لِلْأُنْثَى مِنَ الخَيْلِ الحِجْرُ، وَيُقَالُ لِلْعَقْلِ حِجْرٌ وَحِجًى، وَأَمَّا حَجْرُ اليَمَامَةِ فَهُوَ مَنْزِلٌ
حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ، قَالَ
سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذَكَرَ الَّذِي عَقَرَ النَّاقَةَ، قَالَ: «انْتَدَبَ لَهَا رَجُلٌ ذُو عِزٍّ وَمَنَعَةٍ فِي قَوْمِهِ كَأَبِي زَمْعَةَ»
சமீப விமர்சனங்கள்