தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3378

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தபூக் கோரின்போது (ஸமூத் குலத்தார் வாழ்ந்த) ‘ஹிஜ்ர்’ என்னும் இடத்தில் தங்கிய சமயம் அதன் கிணற்றிலிருந்து (தண்ணீர்) அருந்த வேண்டாம் என்றும் அதிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டாம் என்றும், தம் தோழர்களுக்கு உத்திரவிட்டார்கள். தோழர்கள், ‘நாங்கள் அதிலிருந்து (எடுத்த தண்ணீரால் ஏற்கனவே) மாவு பிசைந்து விட்டோமே! (என்ன செய்வது?)’ என்று கேட்டனர்.

அதற்கு அவர்கள் அந்த மாவை (சாப்பிடாமல்) வீசியெறிந்து விடும்படியும் அந்தத் தண்ணீரைக் கொட்டிவிடும்படியும் உத்திரவிட்டார்கள்.

(ஸமூத் குலத்தாரின் கிணற்றிலிருந்து எடுத்த தண்ணீரால் தயாரித்த) உணவை எறிந்து விடும்படி நபி(ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள்’ என்று சப்ரா இப்னு மஅபத்(ரஹ்) அவர்களும் அபுஷ்ஷமூஸ்(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.

‘அதன் தண்ணீரால் மாவு தயாரித்தவர் அதனை எறிந்து விடட்டும்’ என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
Book :60

(புகாரி: 3378)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِسْكِينٍ أَبُو الحَسَنِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ بْنِ حَيَّانَ أَبُو زَكَرِيَّاءَ، حَدَّثَنَا سُلَيْمَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «لَمَّا نَزَلَ الحِجْرَ فِي غَزْوَةِ تَبُوكَ، أَمَرَهُمْ أَنْ لاَ يَشْرَبُوا مِنْ بِئْرِهَا، وَلاَ يَسْتَقُوا مِنْهَا»، فَقَالُوا: قَدْ عَجَنَّا مِنْهَا وَاسْتَقَيْنَا، «فَأَمَرَهُمْ أَنْ يَطْرَحُوا ذَلِكَ العَجِينَ، وَيُهَرِيقُوا ذَلِكَ المَاءَ»، وَيُرْوَى عَنْ سَبْرَةَ بْنِ مَعْبَدٍ، وَأَبِي الشُّمُوسِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِإِلْقَاءِ الطَّعَامِ، وَقَالَ أَبُو ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اعْتَجَنَ بِمَائِهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.