தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3394

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 (அல்லாஹ் கூறுகிறான்:)

(இந்தச் சந்தர்ப்பத்தில்) ஃபிர் அவ்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த – தம் (இறை) நம்பிக்கையை மறைத்து வைத்திருந்த – இறை நம்பிக்கையாளர் ஒருவர் கூறலானார்:

ஒரு மனிதர், அல்லாஹ்தான் என் இறைவன் என்று கூறுகின்றார் என்பதற்காகவா அவரை நீங்கள் கொன்று விடுவீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய்யராயிருந்தால், அவருடைய பொய் அவருக்கே கேடாக அமையும்.

ஆனால், அவர் உண்மையாளராயிருந்தால், எந்த பயங்கரமான விளைவுகளைக் குறித்து அவர் உங்களை எச்சரிக்கை செய்கிறாரோ, அவற்றில் சில அவசியம் உங்களைப் பீடிக்கவே செய்யும். எவன் வரம்பு மீறுபவனாகவும் பெரும் பொய்யனாகவும் இருக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. (40:28)

பாடம் : 24 அல்லாஹ் கூறுகின்றான்:

மேலும், (நபியே!) மூசாவின் செய்தி உங்களுக்கு எட்டியதா? அவர் நெருப்பைக் கண்ட போது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டுவரக் கூடும்; அல்லது அந்த நெருப்பிற்கு அருகில் (பாதையை அறிந்து கொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டுதல் எனக்குக் கிடைக்கக் கூடும்.

அங்கு சென்றதும் அவர் உரக்க அழைக்கப்பட்டார்:

மூசாவே! நானே உங்களுடைய இறைவன். உங்கள் காலணிகளைக் கழற்றி விடுங்கள். திண்ணமாக, நீங்கள் துவா எனும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்கள் (20:9-12)

(மேலும், அல்லாஹ் கூறுகிறான்:)

மேலும், முன்னரே நாம் உங்களிடம் எந்த இறைத் தூதர்கள் பற்றி எடுத்துரைத்துள்ளோமோ அந்த இறைத்தூதர்களுக்கும், உங்களிடம் எடுத்துரைக்கப்படாத இறைத் தூதர்களுக்கும் நாம் வஹீ அறிவித்திருக்கின்றோம்.

அல்லாஹ் மூசாவிடம் (நேரடி யாகப்) பேசியும் இருக்கின்றான். (4:164)

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னை (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நான் மூஸா அவர்களைப் பார்த்தேன். அவர்கள், ‘ஷனூஆ’ குலத்து மனிதர்களில் ஒருவரைப் போல் (எண்ணெய் தடவிப்) படிந்த தொங்கலான தலைமுடியுடையவர்களாக இருந்தார்கள். நான் ஈசா அவர்களைப் பார்த்தேன். அவர்கள் நடுததர வயதுடைய சிகப்பான மனிதராகவும் (அப்போதுதான்) குளியலறையிலிருந்து வெளியே வந்தவரைப் போன்றும் இருந்தார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததிகளிலேயே அவர்களுக்கு (தோற்றத்தில்) மிகவும் ஒப்பாக இருப்பவன் நானே. பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அவ்விரண்டில் ஒன்றில் பால் இருந்தது; மற்றொன்றில் மது இருந்தது. (வானவர்) ஜிப்ரீல் அவர்கள், ‘இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்களோ அதைக் குடியுங்கள்’ என்று கூறினார்கள். நான் பாலை எடுத்துக் குடித்தேன். ‘நீங்கள் இயல்பான (பானத்)தை எடுத்துக் கொண்டீர்கள். மதுவை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப் போயிருக்கும்’ என்று கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 60

(புகாரி: 3394)

بَابُ {وَقَالَ رَجُلٌ مُؤْمِنٌ مِنْ آلِ فِرْعَوْنَ يَكْتُمُ إِيمَانَهُ} [غافر: 28]- إِلَى قَوْلِهِ – {مُسْرِفٌ كَذَّابٌ} [غافر: 28]

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَهَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَى} [طه: 9] {وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا} [النساء: 164]

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِي: ” رَأَيْتُ مُوسَى: وَإِذَا هُوَ رَجُلٌ ضَرْبٌ رَجِلٌ، كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ، وَرَأَيْتُ عِيسَى، فَإِذَا هُوَ رَجُلٌ رَبْعَةٌ أَحْمَرُ، كَأَنَّمَا خَرَجَ مِنْ دِيمَاسٍ، وَأَنَا أَشْبَهُ وَلَدِ إِبْرَاهِيمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِ، ثُمَّ أُتِيتُ بِإِنَاءَيْنِ: فِي أَحَدِهِمَا لَبَنٌ وَفِي الآخَرِ خَمْرٌ، فَقَالَ: اشْرَبْ أَيَّهُمَا شِئْتَ، فَأَخَذْتُ اللَّبَنَ فَشَرِبْتُهُ، فَقِيلَ: أَخَذْتَ الفِطْرَةَ أَمَا إِنَّكَ لَوْ أَخَذْتَ الخَمْرَ غَوَتْ أُمَّتُكَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.