தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-126

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 48 மக்கள் சிலர், ஒன்றைத் தவறாக விளங்கி விபரீத முடிவுக்கு வந்துவிடக்கூடும் என்று அஞ்சி, சிறந்த ஒன்றைக்கூட செய்யாமல் விட்டுவிடுவது. 

 ஆயிஷா(ரலி) உம்மிடம் நிறைய இரகசியங்களைத் தெரிவிப்பவர்களாயிருந்தார்களே! அவர்கள் கஅபாவைப் பற்றி உம்மிடம் என்ன தகவல் சொல்லியிருக்கிறார்கள்?’ என என்னிடம் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கேட்டார்கள்.

‘ஆயிஷாவே! உம்முடைய சமூகத்தார்க(ளான குறைஷிக)ள் குஃப்ரைவிட்டு (இஸ்லாத்திற்கு வந்த) காலம் மட்டும் சமீபத்தியதாக இல்லாமலிருந்தால் நான் கஅபாவை இடித்துவிட்டு அதனை மக்கள் உள்ளே நுழைவதற்கு ஒரு வாசலும் வெளியேறுவதற்கு விசாலமாக வேறொரு இரண்டு வாசல்களை அமைத்திருப்பேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என ஆயிஷா(ரலி) கூறினார்’ என்றேன்’ அஸ்வத் அறிவித்தார்.

இப்னு ஸுபைரின் ஆட்சிக் காலத்தில் கஅபாவிற்கு இரண்டு வாசல்கள் அமைத்து அதனைச் செய்து காட்டினார்கள்.
Book : 3

(புகாரி: 126)

بَابُ مَنْ تَرَكَ بَعْضَ الِاخْتِيَارِ، مَخَافَةَ أَنْ يَقْصُرَ فَهْمُ بَعْضِ النَّاسِ عَنْهُ، فَيَقَعُوا فِي أَشَدَّ مِنْهُ

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، قَالَ

قَالَ لِي ابْنُ الزُّبَيْرِ، كَانَتْ عَائِشَةُ تُسِرُّ إِلَيْكَ كَثِيرًا فَمَا حَدَّثَتْكَ فِي الكَعْبَةِ؟ قُلْتُ: قَالَتْ لِي: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: « يَا عَائِشَةُ لَوْلاَ قَوْمُكِ حَدِيثٌ عَهْدُهُمْ – قَالَ ابْنُ الزُّبَيْرِ – بِكُفْرٍ، لَنَقَضْتُ الكَعْبَةَ فَجَعَلْتُ لَهَا بَابَيْنِ: بَابٌ يَدْخُلُ النَّاسُ وَبَابٌ يَخْرُجُونَ » فَفَعَلَهُ ابْنُ الزُّبَيْرِ


Bukhari-Tamil-126.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-126.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-1054 , அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-126 , 1583 , 1584 , 1585 , 1586 , 3368 , 4484 , 7243 , முஸ்லிம்-, இப்னு மாஜா-, அபூதாவூத்-, திர்மிதீ-876 , நஸாயீ-, …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.