தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3428

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

ஆதம் (அலை) அவர்களையும், அவர்களின் சந்ததிகளையும் படைத்தது.

அல்லாஹ் கூறுகிறான்:

அந்த நேரத்தை நினைவு கூரும். உங்கள் இறைவன் வானவர்களிடம், நான் ஒரு பிரதிநிதியை (கலீஃபாவை) பூமியில் ஏற்படுத்தப் போகிறேன் என்று கூறினான். அப்போது அவர்கள், பூமியில் அதன் ஒழுங்கமைப்பைச் சீர்குலைத்து, இரத்தம் சிந்தக் கூடியவரையா அதில் (பிரதிநிதியாக) நீ ஏற்படுத்தப் போகிறாய்? நாங்கள் தாம் உன்னைப் புகழ்ந்து துதித்து உன் தூய்மையைப் போற்றிக் கொண்டிருக்கின்றோமே என்று கேட்டார்கள்.

அதற்கு இறைவன், நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயம் நான் அறிவேன் என்று பதிலளித்தான். (2:30)

மேலும் பார்க்க இறை வசனங்கள்: 1)15:26 2)7:189 3) 7:12 4) 2:30 5) 6:165 6)-86:4 7) 90:4 8) 7:26 9) 56:58 10)86:8 11)89:3 12)51:49 13)95:4 14)95:5 15) 103:2 16)37:11 17)56:61 18)2:30 19)2:36 20)2:37 21)2:259 22)7:23 23)47:15 24)21:111 25)7:27

 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

‘இறை நம்பிக்கை கொண்டு, தம் இறைநம்பிக்கையில் அநீதியைக் கலந்திடாதவர்’ என்னும் (திருக்குர்ஆன் 06:82) இறைவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள், ‘தம் இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர் நம்மில் யார் ?’ என்று கேட்டார்கள்.

‘அப்போது (என் அருமை மகனே!) அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே. இணை வைப்பது மாபெரும் அநீதியாகும்’ (என்று லுக்மான் கூறினார்) என்னும் வசனம் அருளப்பட்டது. (பார்க்க: திருக்குர்ஆன் வசனம் 31:13)
Book : 60

(புகாரி: 3428)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الحِكْمَةَ  أَنِ اشْكُرْ لِلَّهِ} [لقمان: 12]

إِلَى قَوْلِهِ {إِنَّ اللَّهَ لاَ يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ} [لقمان: 18] {وَلاَ تُصَعِّرْ:} [لقمان: 18] الإِعْرَاضُ بِالوَجْهِ

حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ

لَمَّا نَزَلَتْ {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} [الأنعام: 82] قَالَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّنَا لَمْ يَلْبِسْ إِيمَانَهُ بِظُلْمٍ؟ فَنَزَلَتْ {لاَ تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ} [لقمان: 13]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.