பாடம்:
வெள்ளை ஆடை அணியுமாறு வந்துள்ள கட்டளை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளை ஆடையை அணியுங்கள். ஏனென்றால், அது மிகத் தூய்மையானது. மிக நல்லது. அதிலேயே உங்களில் மரணித்தவர்களுக்கும் கஃபனிடுங்கள்.
அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ் கூறுகிறார்:
இந்த செய்தியை என்னிடம் அறிவித்த யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள், இந்த செய்தியை நான் எழுதிக்கொள்ளவில்லை என்று கூறினார். நான் என்ன காரணம் என்று கேட்டேன். அதற்கவர்கள் ஸமுரா (ரலி) அவர்களிடமிருந்து மைமூன் பின் அபூஷபீப் அவர்கள் அறிவிக்கும் செய்தியே எனக்கு போதும் என்று பதில் கூறினார்.
(நஸாயி: 5322)الْأَمْرُ بِلُبْسِ الْبِيضِ مِنَ الثِّيَابِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ أَبِي عَرُوبَةَ يُحَدِّثُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْبَسُوا مِنْ ثِيَابِكُمُ الْبَيَاضَ، فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ»
قَالَ يَحْيَى: «لَمْ أَكْتُبْهُ»، قُلْتُ: لِمَ؟ قَالَ: «اسْتَغْنَيْتُ بِحَدِيثِ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ عَنْ سَمُرَةَ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-5322.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-5254.
சமீப விமர்சனங்கள்