ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களுக்கு வெள்ளை ஆடைகளைப் பற்றி வலியுறுத்துகிறேன். உங்களில் உயிருள்ளவர்களும் அதை அணியட்டும். மரணம் அடைந்தவர்களையும் அதில் கஃனிடுங்கள். அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)
(நஸாயி: 5323)أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ سَمُرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«عَلَيْكُمْ بِالْبَيَاضِ مِنَ الثِّيَابِ فَلْيَلْبَسْهَا أَحْيَاؤُكُمْ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ، فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-5323.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-5255.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அபூகிலாபா-அப்துல்லாஹ் பின் ஸைத் பின் அம்ர் பலமானவர் என்றாலும், இவர் ஸமுரா (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்பதால் இது முன்கதிஃ என்ற வகையில் பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-2810 .
சமீப விமர்சனங்கள்