தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3510

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு ஒன்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தது. அக்குழுவினர், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ரபீஆ குலத்தாரின் இந்தக் குடும்பத்தினர் ஆவோம். உங்களைச் சந்திக்கவிடாமல் ‘முளர்’ குலத்து இறை மறுப்பாளர்கள் எங்களைத் தடை செய்கிறார்கள். எனவே, (போர் நிறுத்தம் செய்யப்படுகின்ற) ஒவ்வொரு புனித மாதத்திலும் தான், நாங்கள் உங்களிடம் வந்து சேர முடிகிறது. எனவே, (இப்போது) நீங்கள் எங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை உங்களிடமிருந்து நாங்கள் எடுத்துக் கொள்வோம். எங்களுக்கு அப்பாலிருப்பவர்களிடம் அதை எடுத்துரைப்போம்’ என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘உங்களுக்கு நான்கு விஷயங்களைச் செய்யும்படி கட்டளையிட்டு, நான்கு விஷயங்களைச் செய்ய வேண்டாமென்று தடுக்கிறேன்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது, – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்று உறுதி கூறுவது, – தொழுகையை நிலைநிறுத்துவது, ஸகாத் கொடுப்பது, உங்களுக்குப் போரில் கிடைத்த செல்வத்திலிருந்து ஐந்தில் ஒரு பங்கை அல்லாஹ்வுக்குச் செலுத்தி விடுவது ஆகியன தாம் நான் கட்டளையிடும் அந்த நான்கு விஷயங்கள்.

மேலும், (மது சேகரித்து வைக்கப்படும்) சுரைக்காய்க் குடுவை, மண் சாடி, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய்கள் மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரங்கள் ஆகியவற்றை (உபயோகிக்க வேண்டாமென்று) உங்களுக்குத் தடை செய்கிறேன்’ என்று கூறினார்கள்.
Book :61

(புகாரி: 3510)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ

قَدِمَ وَفْدُ عَبْدِ القَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ: إِنَّا مِنْ هَذَا الحَيِّ مِنْ رَبِيعَةَ، قَدْ حَالَتْ بَيْنَنَا وَبَيْنَكَ كُفَّارُ مُضَرَ، فَلَسْنَا نَخْلُصُ إِلَيْكَ إِلَّا فِي كُلِّ شَهْرٍ حَرَامٍ، فَلَوْ أَمَرْتَنَا بِأَمْرٍ نَأْخُذُهُ عَنْكَ وَنُبَلِّغُهُ مَنْ وَرَاءَنَا، قَالَ: ” آمُرُكُمْ بِأَرْبَعٍ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ: الإِيمَانِ بِاللَّهِ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَأَنْ تُؤَدُّوا إِلَى اللَّهِ خُمْسَ مَا غَنِمْتُمْ، وَأَنْهَاكُمْ عَنِ الدُّبَّاءِ، وَالحَنْتَمِ وَالنَّقِيرِ، وَالمُزَفَّتِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.