தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-6582

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் வெள்ளிக்கிழமை பகலிலோ அல்லது இரவிலோ மரணித்தால் அவரை, கப்ரின் சோதனையிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 6582)

حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا هِشَامٌ يَعْنِي ابْنَ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ رَبِيعَةَ بْنِ سَيْفٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ يَوْمَ الْجُمُعَةِ أَوْ لَيْلَةَ الْجُمُعَةِ إِلَّا وَقَاهُ اللَّهُ فِتْنَةَ الْقَبْرِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-6294.
Musnad-Ahmad-Shamila-6582.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6403.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين ربيعة بن سيف المعافري وعبد الله بن عمرو السهمي

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ரபீஆ பின் ஸைஃப், அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை. மேலும் இதில் வரும் ஹிஷாம் பின் ஸஃத் நினைவாற்றலில் குறையுள்ளவர் என்று அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும்:

1 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-6582 , 6646 , 7050 , திர்மிதீ-1074 , ரஸ்ஸாக்-5596 , அல்முஃஜமுல் கபீர்-14251 , 14747 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3107 ,

2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : முஸ்னத் அபீயஃலா-4113 , மதாலிபுல் ஆலியா-795 .

3 . இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) வழியாக வரும் செய்தி:

பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5595 ,

4 . முத்தலிப் பின் அப்துல்லாஹ் (ரஹ்) வழியாக வரும் செய்தி:

பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5597 ,

கூடுதல் தகவல் : ضعف حديث فضل الموت يوم الجمعة .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.