தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3532

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 17

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் இறைவசனங்கள் (48:29, 61:6)

அல்லாஹ் கூறுகிறான்:

முஹம்மத், அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் இருப்பவர்கள் இறை மறுப்பாளர்களைப் பொறுத்துக் கடினமானவர்களும் தங்களுக்கிடையே கருணைமிக்கவர்களும் ஆவர். (அல்குர்ஆன்: 48:29)

மர்யமின் மைந்தர் ஈஸா இவ்வாறு கூறியதையும் நினைவு கூருங்கள்:

இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் அல்லாஹ்வினால் உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கும் தூதராவேன். நான், எனக்கு முன்பே வந்துள்ள தவ்ராத் வேதத்தை மெய்ப்படுத்தத் கூடியவனாய் இருக்கின்றேன்.

மேலும், எனக்கு பிறகு அஹ்மத் எனும் பெயருடைய ஒரு தூதர் வருவார் என்று நற்செய்தி சொல்பவனாகவும் இருக்கிறேன்.

எனினும், அவர் அம்மக்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போது, இது வெளிப்படையான மோசடி என்று அவர்கள் கூறினார்கள். (அல்குர்ஆன்: 61:6)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன.

நான் முஹம்மது – புகழப்பட்டவர் – ஆவேன்.

நான் அஹ்மத் – இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன்.

நான் மாஹீ – அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான்.

நான் ஹாஷிர் – ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள்.

நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)

அத்தியாயம்: 61

(புகாரி: 3532)

بَابُ مَا جَاءَ فِي أَسْمَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

وَقَوْلِ اللَّهِ تَعَالَى {مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الكُفَّارِ} [الفتح: 29]

وَقَوْلِهِ {مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ} [الصف: 6]

حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، قَالَ: حَدَّثَنِي مَعْنٌ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

لِي خَمْسَةُ أَسْمَاءٍ: أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ وَأَنَا المَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الكُفْرَ، وَأَنَا الحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا العَاقِبُ


Bukhari-Tamil-3532.
Bukhari-TamilMisc-3532.
Bukhari-Shamila-3532.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.