தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3177

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் :

வாகனத்தில் ஜனாஸாவைப் பின்தொடர்தல்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவில் இருந்த போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏற மறுத்தார்கள். (அடக்கம் செய்து) திரும்பிய போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏறிக் கொண்டார்கள்.

அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘வானவர்கள் நடந்து வந்தனர். அவர்கள் நடக்கும் போது நான் வாகனத்தில் ஏறவில்லை. அவர்கள் சென்றதும் நான் வாகனத்தில் ஏறிக் கொண்டேன்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

(அபூதாவூத்: 3177)

بَابُ الرُّكُوبِ فِي الْجَنَازَةِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى الْبَلْخِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ ثَوْبَانَ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أُتِيَ بِدَابَّةٍ وَهُوَ مَعَ الْجَنَازَةِ فَأَبَى أَنْ يَرْكَبَهَا، فَلَمَّا انْصَرَفَ أُتِيَ بِدَابَّةٍ فَرَكِبَ، فَقِيلَ لَهُ، فَقَالَ: «إِنَّ الْمَلَائِكَةَ كَانَتْ تَمْشِي، فَلَمْ أَكُنْ لِأَرْكَبَ وَهُمْ يَمْشُونَ، فَلَمَّا ذَهَبُوا رَكِبْتُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2763.
Abu-Dawood-Shamila-3177.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2765.




  • இந்த அறிவிப்பாளர்தொடர் தவறானது என அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் விமர்சித்துள்ளார்கள். (இலலுல் ஹதீஸ்-1078 (3/554)

அல்பானி,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்றோர் இது சரியான செய்தி என கூறியுள்ளனர்.

மேற்கண்ட செய்தியை சரி என வைத்துக்கொண்டால், வாகனத்தில் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லலாமா?

  • வானவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரடியாகக் கண்டனர். அவர்கள் நடந்து வருவதையும் அறிந்தனர். இதனால் வாகனத்தைத் தவிர்த்தனர். இந்த நிலை மற்றவர்களுக்கு இல்லை. வானவர்கள் வருகிறார்கள் என்பதும் மற்றவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வாகனத்தில் வருகிறார்களா? நடந்து வருகிறார்களா என்பதும் மற்றவர்களுக்குத் தெரியாது. எனவே நமக்குத் தெரியாத விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது.
  • வாகனத்தில் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்ல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்ததற்கு ஆதாரம் உள்ளதால் விரும்பினால் வாகனத்தில் ஏறி ஜனாஸாவைப் பின் தொடரலாம்; ஜனாஸாவை முந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஜனாஸாவுடன் நடந்து செல்பவர் ஜனாஸாவுக்கு முன்னேயும் வலது இடது புறங்களிலும் செல்வதற்கு அனுமதி உண்டு.

பார்க்க : அஹ்மத்-18162 .

மேலும் பார்க்க : ஹாகிம்-1314 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.