தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1314

A- A+


ஹதீஸின் தரம்: More Info

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏற மறுத்தார்கள். (அடக்கம் செய்து) திரும்பிய போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏறிக் கொண்டார்கள்.

அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘வானவர்கள் நடந்து வந்தனர். அவர்கள் நடக்கும் போது நான் வாகனத்தில் ஏறவில்லை. அவர்கள் சென்றதும்–அல்லது (வானத்தில்) மேல் ஏறிச்சென்றதும்–நான் வாகனத்தில் ஏறிக் கொண்டேன்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

(ஹாகிம்: 1314)

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْقَطِيعِيُّ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنِي أَبِي، ثنا عَبْدُ الرَّزَّاقِ، أَنْبَأَ مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ ثَوْبَانَ،

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيَّعَ جِنَازَةً، فَأُتِيَ بِدَابَّةٍ، فَأَبَى أَنْ يَرْكَبُهَا، فَلَمَّا انْصَرَفَ أُتِيَ بِدَابَّةٍ فَرَكِبَهَا» ، فَقِيلَ لَهُ: فَقَالَ: ” إِنَّ الْمَلَائِكَةَ كَانَتْ تَمْشِي فَلَمْ أَكُنْ لِأَرْكَبَ وَهُمْ يَمْشُونَ، فَلَمَّا ذَهَبُوا – أَوْ قَالَ: عَرَجُوا – رَكِبْتُ

«هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ الشَّيْخَيْنِ، وَلَمْ يُخَرِّجَاهُ، وَلَهُ شَاهِدٌ بِلَفْظٍ أَشْفَى مِنْ هَذَا»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1314.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1246.




  • இந்த அறிவிப்பாளர்தொடர் தவறானது என அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் விமர்சித்துள்ளார்கள். (அல்இலல் லி இப்னி அபீஹாத்திம் 3/554)

علل الحديث: (3 / 554)

  • மேலும் இந்த செய்தி ஸவ்பான் (ரலி) அவர்களின் சொல்லாக வந்திருப்பதே சரியானது என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் கூறியுள்ளார். (தல்கீஸ் 2/142)

التلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير: (2 / 142)

1 . இந்தக் கருத்தில் ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : ஹாகிம்-1314 , அபூதாவூத்-3177 , முஸ்னத் பஸ்ஸார்-4191 , குப்ரா பைஹகீ-6854 ,

மேலும் பார்க்க : திர்மிதீ-1012 .

2 . யஹ்யா பின் கஸீர் வழியாக வரும் செய்தி:

பார்க்க : முஸ்னத் பஸ்ஸார்-4192 ,

3 . அபூ ஹுபைரா வழியாக வரும் செய்தி:

பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீஷைபா-11254 , …..

  • சரியான ஹதீஸ்கள்:

பார்க்க : அஹ்மத்-18162 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.