தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3580

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஜாபிர் (ரலி) அறிவித்தார்.

என் தந்தை, தம் மீது கடனிருக்கும் நிலையில் இறந்துவிட்டார். எனவே, நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என் தந்தை, தம் மீதிருந்த கடனை (அடைக்காமல்) அப்படியே விட்டுச் சென்றார். என்னிடம் அவரின் பேரீச்ச மரங்களின் விளைச்சலைத் தவிர வேறெதுவும் இல்லை. அந்தப் பேரீச்ச மரங்களின் பல ஆண்டுகளின் விளைச்சல் கூட அவரின் மீதுள்ள கடனை அடைக்கும் அளவிற்கு எட்டாது.

எனவே, கடன்காரர்கள் என்னைக் கடும் சொற்களைப் பயன்படுத்தி ஏசாமலிருப்பதற்காக நீங்கள் என்னுடன் வாருங்கள்’ என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் (என்னுடன் வந்து) பேரீச்சம் பழங்களைச் சேமித்துக் காய வைக்கும் களங்களில் ஒன்றைச் சுற்றி நடந்து (பரக்கத் என்னும் அருள்வளம் வேண்டி) பிரார்த்திதார்கள்.

பிறகு மற்றொரு களத்தையும் சுற்றி நடந்தார்கள். (பிறகு அருள்வளம் வேண்டி பிரார்த்திதார்கள்) பிறகு அதன் அருகில் அமர்ந்து கொண்டு, ‘அதை வெளியே எடுங்கள்’ என்று கூறினார்கள். கடன்காரர்களுக்குச் சேர வேண்டியதை நிறைவாகக் கொடுத்தார்கள். அவர்களுக்குக் கொடுத்த அதே அளவுக்கு அது மீதமாகிவிட்டது.
Book :61

(புகாரி: 3580)

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، قَالَ: حَدَّثَنِي عَامِرٌ، قَالَ: حَدَّثَنِي جَابِرٌ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ أَبَاهُ تُوُفِّيَ وَعَلَيْهِ دَيْنٌ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: إِنَّ أَبِي تَرَكَ عَلَيْهِ دَيْنًا، وَلَيْسَ عِنْدِي إِلَّا مَا يُخْرِجُ نَخْلُهُ، وَلاَ يَبْلُغُ مَا يُخْرِجُ سِنِينَ مَا عَلَيْهِ، فَانْطَلِقْ مَعِي لِكَيْ لاَ يُفْحِشَ عَلَيَّ الغُرَمَاءُ، فَمَشَى حَوْلَ بَيْدَرٍ مِنْ بَيَادِرِ التَّمْرِ فَدَعَا، ثَمَّ آخَرَ، ثُمَّ جَلَسَ عَلَيْهِ، فَقَالَ: «انْزِعُوهُ» فَأَوْفَاهُمُ الَّذِي لَهُمْ وَبَقِيَ مِثْلُ مَا أَعْطَاهُمْ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.