தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3332

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவைப் பின் தொடர்ந்தோம். அவர்கள் கப்ருக்கு அருகில் நின்று கொண்டு, ‘கால் பக்கம் விசாலமாக்கு! தலைப் பக்கம் விசாலமாக்கு! என்று குழி வெட்டுபவரிடம் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டேன். பின்பு நாங்கள் (ஜனாஸாவை அடக்கம் செய்துவிட்டு) திரும்பியபோது வழியில் ஒரு பெண்ணின் (சார்பாக அனுப்பப்பட்ட) அழைப்பாளர் எங்களை விருந்திற்கு அழைத்தார். எனவே! நபி (ஸல்) அவர்கள் அந்த அழைப்பை ஏற்று சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் சென்றோம். உணவு கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் உணவில் கையை வைத்தார்கள். கூட்டத்தில் உள்ள அனைவரும் கையை வைத்தனர். பிறகு எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு உணவுக்கவளம் (மெள்ளமுடியாமல் வாயில் சுழன்றுக்கொண்டு) விக்கிக் கொள்வதை (சிறுவர்களாகிய) எங்களின் தந்தையர் கண்டனர். “இந்த ஆட்டிறைச்சி அதனுடைய உரிமையாளர் அனுமதியின்றி எடுக்கப்பட்டதாகக் கருதுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது விருந்திற்கு அழைத்த பெண், அல்லாஹ்வின் தூதரே! ஆடு வாங்கிவர நகீஃ என்ற ஆட்டுச் சந்தைக்கு ஆளனுப்பினேன். ஆடு கிடைக்கவில்லை. பின்பு (ஏற்கனவே) ஆடு வாங்கியிருந்த எனது அண்டைவீட்டாருக்கு ஆளனுப்பி அதற்குரிய கிரயத்தை கொடுத்து ஆட்டை கேட்டேன். அவர் தரமறுத்து விட்டதால் எனக்கு ஆடு கிடைக்கவில்லை. பின்பு அவரின் மனைவியிடத்தில் ஆளனுப்பி கேட்கும் போது அவர் தந்துவிட்டார் என்று (தனது பணியாளரை அனுப்பி) விளக்கம் கூறினார். அதனால் நபி (ஸல்) அவர்கள், (சாப்பிடாமல்) இந்த உணவை கைதிகளுக்கு கொடுத்து விடுங்கள் என்று கூறிவிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஒரு அன்ஸாரி நபித்தோழர்.

(அபூதாவூத்: 3332)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ رَجُلٍ، مِنَ الْأَنْصَارِ، قَالَ:

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْقَبْرِ يُوصِي الْحَافِرَ: «أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ، أَوْسِعْ مِنْ قِبَلِ رَأْسِهِ»، فَلَمَّا رَجَعَ اسْتَقْبَلَهُ دَاعِي امْرَأَةٍ فَجَاءَ وَجِيءَ بِالطَّعَامِ فَوَضَعَ يَدَهُ، ثُمَّ وَضَعَ الْقَوْمُ، فَأَكَلُوا، فَنَظَرَ آبَاؤُنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلُوكُ لُقْمَةً فِي فَمِهِ، ثُمَّ قَالَ: «أَجِدُ لَحْمَ شَاةٍ أُخِذَتْ بِغَيْرِ إِذْنِ أَهْلِهَا»، فَأَرْسَلَتِ الْمَرْأَةُ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَرْسَلْتُ إِلَى الْبَقِيعِ يَشْتَرِي لِي شَاةً، فَلَمْ أَجِدْ فَأَرْسَلْتُ إِلَى جَارٍ لِي قَدِ اشْتَرَى شَاةً، أَنْ أَرْسِلْ إِلَيَّ بِهَا بِثَمَنِهَا، فَلَمْ يُوجَدْ، فَأَرْسَلْتُ إِلَى امْرَأَتِهِ فَأَرْسَلَتْ إِلَيَّ بِهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَطْعِمِيهِ الْأُسَارَى»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-2894.
Abu-Dawood-Shamila-3332.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2897.




  • மேற்கண்ட செய்தியின் கருத்தில் சில செய்திகள் சுருக்கமாகவும், சில செய்திகள் விரிவாகவும் சில வார்த்தைமாற்றங்களுடன் வந்துள்ளது.
  • விருந்திற்கு அழைத்தது இறந்தவரின் மனைவி என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    ஹதீஸ் விளக்கவுரையிலும், வேறு சில நூல்களிலும் இருப்பது தவறாகும். காரணம் இந்த செய்தியின் மற்ற அறிவிப்பாளர் தொடர்களை பார்க்கும் போது இது தவறு என்றும், விருந்துக்கு அழைத்த பெண் வேறு நபர் என்றும் தெரிகிறது.
  • எனவே இதை வைத்துக் கொண்டு சிலர் மய்யித் வீட்டில் 1ம் நாள் கத்தம் பாத்திஹா ஓதி விருந்து சாப்பிடலாம் என்று கூறுவதற்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை.

2 . இந்தக் கருத்தில் ஒரு அன்ஸாரி நபித்தோழர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6500 , அஹ்மத்-22509 , 23465அபூதாவூத்-3332 , ஷரஹ் மஆனில் ஆஸார்-6408 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-3005 , 3006 , அல்முஃஜமுல் அவ்ஸத்-1602 , தாரகுத்னீ-4763 , 4764 , 4765 , குப்ரா பைஹகீ-6755 , 10825 , 11528 ,

மேலும் பார்க்க: அஹ்மத்-14785 .

2 comments on Abu-Dawood-3332

  1. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு ஜனாஸாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரின் மேல் நின்று கொண்டு கப்று தோன்றுபவரைப் பார்த்து மய்யித்தின் கால்மாட்டிலும், தலைமாட்டிலும் குழியை விசாலப்படுத்துமாறு யோசனை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து திரும்பியபோது இறந்தவரின் மனைவி அனுப்பி வைத்த அழைப்பாளர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை (உணவு உண்பதற்காக) அழைத்தார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த அழைப்பை ஏற்று சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் சென்றோம். உணவு கொண்டு வரப்பட்டது. உடனே உணவில் கையை வைத்தார்கள். கூட்டத்தில் உள்ள அனைவரும் கையை வைத்தனர். பிறகு எல்லோரும் சாப்பிட்டார்கள்.

    ஹழ்ரத் ஆஸிம் ரலியல்லாஹு அன்ஹு

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      விருந்திற்கு அழைத்தது இறந்தவரின் மனைவி என்பது தவறு. மய்யித் வீட்டில் பாத்திஹா ஓதுவதற்கு இதை சிலர் ஆதாரமாக காட்டுகின்றனர். இன்ஷா அல்லாஹ் இந்த செய்தியின் கருத்தில் வரும் செய்திகள் பதிவு செய்யப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.