பாடம்:
கப்ரின் மீது (தோண்டிய மண்ணை விட) அதிகப்படுத்துதல்.
கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லது அதில் அதிகப்படுத்துவதையும் அல்லது அதை (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும்; அதன் மீது எழுதுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுலைமான் பின் மூஸா, “கப்ரின் மீது எழுதுவதையும்” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று கூடுதலாக அறிவித்துள்ளார்.
(நஸாயி: 2027)الزِّيَادَةُ عَلَى الْقَبْرِ
أَخْبَرَنَا هَارُونُ بْنُ إِسْحَقَ، قَالَ: حَدَّثَنَا حَفْصٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، وَأَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ:
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْنَى عَلَى الْقَبْرِ، أَوْ يُزَادَ عَلَيْهِ، أَوْ يُجَصَّصَ» زَادَ سُلَيْمَانُ بْنُ مُوسَى: «أَوْ يُكْتَبَ عَلَيْهِ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-2027.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-2010.
- இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் இப்னு ஜுரைஜ் —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும்.
- இப்னு ஜுரைஜ் —> ஸுலைமான் பின் மூஸா —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடர் முன்கதிஃ என்பதால் பலவீனமானதாகும். காரணம் இப்னு ஜுரைஜ், ஸுலைமான் பின் மூஸா அவர்களிடம் நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை. மேலும் ஸுலைமான் பின் மூஸா அவர்கள், ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/111)
மேலும் பார்க்க: முஸ்லிம்-1765 .
சமீப விமர்சனங்கள்