தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23845

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

23845. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்களின் தாய் இறந்து விட்டார். எனவே அவர், அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்மம்?’ என்று கேட்டார். ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மதீனாவில் இருக்கும் இந்த தண்ணீர் பிடிக்கும் இடம் ஸஅது பின் உபாதா (ரலி) யின் குடும்பத்திற்கு சொந்தமானதாகும்.

அறிவிப்பவர் : (ரஹ்)

அறிவிப்பாளர் ஷுஃபா (ரஹ்) அவர்கள் கூறினார்:

நான் கத்தாதா (ரஹ்) அவர்களிடம், தண்ணீர் பிடிக்கும் இடத்தைப்பற்றி யார் கூறியது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்று பதிலளித்தார்.

ஹஸன் பஸரீ (ரஹ்)

الحسن البصري

இறப்பு: ஹிஜ்ரி 110

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அல்-ஹஸன் பின் அபீ அல்-ஹஸன் (யஸார்)

தந்தை பெயர்: அபூ அல்-ஹஸன் (யஸார்)

வம்சம்: ஸைத் பின் ஸாபித் ரலி அவர்களின் அடிமை, அல்அன்ஸாரீ

புனைப்பெயர்: அபூ ஸயீத்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: மதீனா, பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 21, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 110

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஹஸன் பஸரீ ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 21 ஆம் ஆண்டு மதீனாவில் பிறந்தார்கள். இவர் ஒரு தாபிஈ ஆவார். இவர் பஸராவில் வாழ்ந்து, அங்குள்ள அறிஞர்களில் தலைசிறந்தவராகத் திகழ்ந்தார்.

இவர் ஒரு சிறந்த அறிஞர், மார்க்க சட்ட நிபுணர், நம்பகமானவர், வணக்கசாலி, அதிக ஞானம் கொண்டவர், நாவன்மை மிக்கவர் மற்றும் அழகான தோற்றம் கொண்டவர். இவர் ஹிஜ்ரி 110 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): உஸ்மான் பின் அஃப்பான் ரலி, ஸமுரா பின் ஜுன்துப் ரலி, அபூ ஹுரைரா ரலி, அனஸ் பின் மாலிக் ரலி, இப்னு உமர் ரலி, அப்துல்லாஹ் பின் முகஃப்பல் ரலி, அம்ர் பின் தக்ப் ரலி

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஹுமைத் அத்தவீல், யஸீத் பின் அபீ மர்யம், அய்யூப் அஸ்ஸக்தியானீ, கதாதா பின் திஆமா, அவ்ஃப் பின் அபீ ஜமீலா அல்அஃராபீ, அப்துல்லாஹ் பின் பக்ர், ஜரீர் பின் ஹாஸிம், அபூ அல்-அஷ்ஹப் அல்அத்தார்தீ, அர்ரபீஃ பின் ஸபீஹ், ஸயீத் பின் இயாஸ் அல்ஜரீரீ, ஸஃத் பின் இப்ராஹீம், ஸிமாக் பின் ஹர்ப்

வேறு பெயர்கள்: அல்-ஹஸன் பின் அபீ அல்-ஹஸன், அபூ ஸயீத்


ஆதாரம்: muslimscholars.info (11016) · Should verify


حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: سَمِعْتُ شُعْبَةَ، يُحَدِّثُ عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ الْحَسَنَ، يُحَدِّثُ عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ:

أَنَّ أُمَّهُ مَاتَتْ، فَقَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ» قَالَ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ» قَالَ: فَتِلْكَ سِقَايَةُ آلِ سَعْدٍ بِالْمَدِينَةِ ”

قَالَ شُعْبَةُ: فَقُلْتُ لِقَتَادَةَ: مَنْ يَقُولُ تِلْكَ سِقَايَةُ آلِ سَعْدٍ قَالَ: الْحَسَنُ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23845.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-23213.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹஸன் பஸரீ (ரஹ்), ஸஅது பின் உபாதா (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. எனவே இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தியாகும்.

மேலும் பார்க்க : அஹ்மத்-22458 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.