தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-21693

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்களது பெயரால்  நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 21693)

حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا دَاوُدُ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي زَكَرِيَّا الْخُزَاعِيِّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-21693.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21151.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين عبد الله بن أبي زكريا الخزاعي وعويمر بن مالك الأنصاري ، وباقي رجاله ثقات عدا داود بن عمرو الأودي وهو صدوق حسن الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் அபூஸக்கரிய்யா, அபுத்தர்தா (ரலி) அவர்களை சந்திக்கவில்லை. எனவே இது முன்கதிஃயான அறிவிப்பாளர்தொடராகும்.

رجاله ثقات إلا أن في سنده انقطاعا بين عبد الله بن أبي زكريا راويه عن أبي الدرداء وأبي الدرداء فإنه لم يدركه
فتح الباري شرح صحيح البخاري: (10 / 592)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-21693 , அபூதாவூத்-4948 , தாரிமீ-2736 , இப்னு ஹிப்பான்-5818 , குப்ரா பைஹகீ-19308 ,

மறுமையில் தந்தை பெயருடன் அழைக்கப்படுதல் பற்றி சரியான ஹதீஸ்கள் உள்ளன. பார்க்க: புகாரி-6177 .

3 comments on Musnad-Ahmad-21693

  1. அஸ்ஸலாமு அலைக்கும் மறுமையில் இறைவன் என்த பெயருடன் எங்களை அழைப்பான் தாயின் பெயருடன் இணைத்து அழைப்பதாக சிலர் கூறுகிறார்கள் இது உண்மையா

  2. என் மனைவி எனக்கு தெரியாமல் வேறு ஒரு நபருடன் பெற்றுக்கொண்ட குழந்தையை மறுமையில் அவன் தந்தை பெயரிட்டு அழைக்கும் போது உலகத்தில் என் மகன் என்று அழைத்தவர் மறுமையில் இன்னாருடைய மகன் என்று அழைக்கும் போது என் மானம் தெற்காக இறைவன் மறுமையில் தாய் பெயரைக்கொண்டு அழைப்பதாக தகவல் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது ஆதாரங்கள் எனக்கு கிடைக்கவில்லை இது சரியா

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர்-7979 இல் இறந்தவரை தாயுடன் இணைத்து அழைத்து அவருக்கு தல்கீன்- கப்ரில் கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொல்லித் தரவேண்டும் என்று வந்துள்ளது. இது பலவீனமான செய்தி.

      மேலும்,

      (நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக… (அல்குர்ஆன் 17:71) என்ற வசனத்தில் வரும் இமாம் என்ற வார்த்தைக்கு உம்-தாய் என்பதின் பன்மை என்று சிலர் விளக்கம் கூறுவதையும், அதற்கு கூறும் காரணங்களை ஸமக்ஸரீ இமாம் தனது கஷ்ஷாஃப் என்ற குர்ஆன் விளக்கவுரை நூலில் கூறி இது புதுமையான விளக்கம் என்றும் கூறியுள்ளார். என்றாலும் இந்தக் கருத்துக்கு சரியான ஆதாரங்கள் இல்லை.

      உலகில் தந்தைப் பெயருடன் அழைக்கப்பட்டால் அவர் மறுமையில் அவ்வாறு அழைக்கப்படுவார். தந்தை பெயரால் அறியப்படாதவர்கள் உலகில் எவ்வாறு அழைக்கப்பட்டாரோ அவ்வாறு அழைக்கப்படுவார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.