அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வரமுடியாது. நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தர்மம் தான்’ என்று கூறினார்கள்; மேலும், முஹம்மதின் குடும்பத்தார் உண்பதெல்லாம் இச்செல்வத்திலிருந்து தான்; அதாவது அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து தான் அதில் தங்கள் உணவுச் செலவை விட அதிகமாக எடுத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமையில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களின் தர்மப் பொருள்கள், நபியவர்களின் காலத்தில் எந்த வழி முறைப்படி கையாளப்பட்டு வந்தனவோ அதில் சிறிதையும் நான் மாற்றமாட்டேன். அவற்றின் விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படி நடந்து கொண்டார்களோ அவ்வாறே நான் நடந்து கொள்வேன்’ என்று கூறினார்கள். உடனே, அலீ அவர்கள், ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைப் புகழ்ந்துவிட்டு, ‘அபூ பக்ர் அவர்களே! உங்கள் சிறப்பை நாங்கள் அறிந்திருக்கிறோம்’ என்று கூறினார்கள் – மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தமக்கிருக்கும் உறவையும் அவர்களின் உரிமையையும் எடுத்துரைத்தார்கள். உடனே அபூ பக்ர்(ரலி) (தாம் பங்கு தர மறுப்பதற்குக் காரணம் கூறும் விதத்தில்) பேசினார்கள். ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என் உறவினர்களின் உறவைப் பேணி (அவர்களுடன் நல்ல முறையில்) நடந்து கொள்வதை விட இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்’ என்று கூறினார்கள்.
Book :62
فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لاَ نُورَثُ مَا تَرَكْنَا فَهُوَ صَدَقَةٌ، إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ مِنْ هَذَا المَالِ، يَعْنِي مَالَ اللَّهِ، لَيْسَ لَهُمْ أَنْ يَزِيدُوا عَلَى المَأْكَلِ»، وَإِنِّي وَاللَّهِ لاَ أُغَيِّرُ شَيْئًا مِنْ صَدَقَاتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّتِي كَانَتْ عَلَيْهَا فِي عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَأَعْمَلَنَّ فِيهَا بِمَا عَمِلَ فِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَشَهَّدَ عَلِيٌّ ثُمَّ قَالَ: إِنَّا قَدْ عَرَفْنَا يَا أَبَا بَكْرٍ فَضِيلَتَكَ، وَذَكَرَ قَرَابَتَهُمْ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَقَّهُمْ، فَتَكَلَّمَ أَبُو بَكْرٍ فَقَالَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَقَرَابَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَبُّ إِلَيَّ أَنْ أَصِلَ مِنْ قَرَابَتِي
சமீப விமர்சனங்கள்