புஸ்ர் பின் அர்தாத் அல்குரஷிய்யி அவர்கள் கூறியதாவது:
யா அல்லாஹ்! எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாத்தருள்வாயாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்து கூறியதை நான் செவியேற்றேன்.
அறிவிப்பவர்: அய்யூப் பின் மைஸரா
(முஸ்னது அஹ்மத்: 17628)حَدَّثَنَا هَيْثَمُ بْنُ خَارِجَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَيُّوبَ بْنِ مَيْسَرَةَ بْنِ حَلْبَسٍ، قَالَ: سَمِعْتُ أَبِي، يُحَدِّثُ ، عَنْ بُسْرِ بْنِ أَرْطَاةَ الْقُرَشِيِّ، قَالَ:
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو: «اللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا، وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا، وَعَذَابِ الْآخِرَةِ»
قَالَ عَبْدُ اللَّهِ: وَسَمِعْتُهُ أَنَا مِنْ هَيْثَمٍ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17628.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-17288.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் புஸ்ர் பின் அர்தாத் அல்குரஷிய்யி பற்றி சிலர் நபித்தோழர் என்றும் சிலர் நபித்தோழர் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
- அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.போன்ற அறிஞர்கள் இவர் நபி (ஸல்) அவர்களிடம் செவியேற்கவில்லை எனக் கூறியுள்ளனர், மேலும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், மதீனாவாசிகள் இவர் நபி (ஸல்) அவர்களிடம் செவியேற்கவில்லை என்று கூறியதாக குறிப்பிட்டு, இவர் (ஆட்சியில் இருக்கும் போது நடந்துகொண்ட செயல்களால்) கெட்ட மனிதர் என்றும் விமர்சித்துள்ளார். (நூல்: அல்இஸ்தீஆப் 1/157)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-17628 , இப்னு ஹிப்பான்-949 , அல்முஃஜமுல் கபீர்-1196 , 1197 , 1198 , ஹாகிம்-6508 ,
சமீப விமர்சனங்கள்