புஸ்ர் பின் அர்தாத் அல்குரஷிய்யி அவர்கள் கூறியதாவது:
யா அல்லாஹ்! எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாத்தருள்வாயாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்து கூறியதை நான் செவியேற்றேன்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 1198)حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ السُّمَيْدِعِ الْأَنْطَاكِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ الْمُبَارَكِ الصُّورِيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ أَبِي شَيْبَانَ، عَنْ يَزِيدَ بْنِ عُبَيْدَةَ بْنِ الْمُهَاجِرِ، عَنْ يَزِيدَ، مَوْلَى بُسْرِ بْنِ أَرْطَاةَ عَنْ بُسْرِ بْنِ أَبِي أَرْطَاةَ،
أَنَّهُ كَانَ يَدْعُو: «اللهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-1198.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-1183.
- இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், மதீனாவாசிகள் இவர் நபி (ஸல்) அவர்களிடம் செவியேற்கவில்லை என்று கூறியதாக குறிப்பிட்டு, இவர் (ஆட்சியில் இருக்கும் போது நடந்துகொண்ட செயல்களால்) கெட்ட மனிதர் என்றும் விமர்சித்துள்ளார். (நூல்: அல்இஸ்தீஆப் 1/157)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க : அஹ்மத்-17628 .
சமீப விமர்சனங்கள்