தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3835

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஓர் அரபுக் கோத்திரத்திற்குச் சொந்தமான கருப்பு (நிற அடிமைப்) பெண் ஒருத்தி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாள். அவளுக்குப் பள்ளி வாசலில் சிறிய (தங்கும்) அறையொன்று இருந்தது. அவள் எங்களிடம் வந்து பேசிக் கொண்டிருப்பாள். அவள் பேசி முடிக்கும்போது, ‘அரையணித் தோள் பட்டிகை (காணாமல் போன) நாள் எம் இறைவனின் விந்தைகளில் ஒன்றாகும். அந்த நாள் இறை மறுப்பு (மேலோங்கி) இருந்த ஊரிலிருந்து என்னை (வெளியேற்றிக்) காப்பாற்றிவிட்டது’ என்று பாடுவாள். இவ்வாறு அவள் அதிகமாகப் பாடுவதைக் கேட்ட நான், ‘அரையணித் தோள் பட்டிகை நாள்’ என்றால் என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவள் சொன்னாள்: என் (எஜமானியர்) குடும்பத்தாரில் ஒருவருக்குரிய சிறுமி ஒருத்தி (மணப் பெண்ணாக இருந்ததால்) பதனிடப்பட்ட தோலால் ஆன (சிவப்பு) அரையணித் தோள் பட்டிகை ஒன்றை அணிந்து கொண்டு (குளியலறைக்குச்) சென்றாள். அப்போது அந்தப் பட்டிகை (எதிர்பாராத விதமாக) அவளிடமிருந்து (கழன்று) விழுந்து விட, அதைப் பருந்து ஒன்று இறைச்சி என்று நினைத்துக் கவ்வி எடுத்துச் சென்றுவிட்டது. (என் எஜமானர்கள் நானே அதைச் திருடினேன் என்று) என் மீது குற்றம் சாட்டிச் என்னைச் சூழ்ந்திருக்க, நான் கடும் வேதனையில் (துடித்தபடி) இருந்தபோது, அந்தப் பருந்து எங்கள் தலைகளுக்கு நேராக வந்து அந்தப் பட்டிகையை(க் கீழே) போட்டது. உடனே, அதை அவர்கள் எடுத்துக் கொண்டனர். அப்போது நான் அவர்களிடம், ‘நான் குற்றமற்றவளாயிருக்க, நான் திருடிவிட்டதாக நீங்கள் குற்றம் சாட்டினீர்களே அந்தப் பட்டிகை தான் இது’ என்று சொன்னேன்.
Book :63

(புகாரி: 3835)

حَدَّثَنِي فَرْوَةُ بْنُ أَبِي المَغْرَاءِ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

أَسْلَمَتِ امْرَأَةٌ سَوْدَاءُ لِبَعْضِ العَرَبِ وَكَانَ لَهَا حِفْشٌ فِي المَسْجِدِ، قَالَتْ: فَكَانَتْ تَأْتِينَا فَتَحَدَّثُ عِنْدَنَا، فَإِذَا فَرَغَتْ مِنْ حَدِيثِهَا قَالَتْ:
وَيَوْمُ الوِشَاحِ مِنْ تَعَاجِيبِ رَبِّنَا، … أَلاَ إِنَّهُ مِنْ بَلْدَةِ الكُفْرِ أَنْجَانِي
فَلَمَّا أَكْثَرَتْ، قَالَتْ لَهَا عَائِشَةُ: وَمَا يَوْمُ الوِشَاحِ؟ قَالَتْ: خَرَجَتْ جُوَيْرِيَةٌ لِبَعْضِ أَهْلِي، وَعَلَيْهَا وِشَاحٌ مِنْ أَدَمٍ، فَسَقَطَ مِنْهَا، فَانْحَطَّتْ عَلَيْهِ الحُدَيَّا، وَهِيَ تَحْسِبُهُ لَحْمًا، فَأَخَذَتْهُ فَاتَّهَمُونِي بِهِ فَعَذَّبُونِي، حَتَّى بَلَغَ مِنْ أَمْرِي أَنَّهُمْ طَلَبُوا فِي قُبُلِي، فَبَيْنَا هُمْ حَوْلِي وَأَنَا فِي كَرْبِي، إِذْ أَقْبَلَتِ الحُدَيَّا حَتَّى وَازَتْ بِرُءُوسِنَا، ثُمَّ أَلْقَتْهُ، فَأَخَذُوهُ، فَقُلْتُ لَهُمْ: هَذَا الَّذِي اتَّهَمْتُمُونِي بِهِ وَأَنَا مِنْهُ بَرِيئَةٌ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.