நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஃபஜ்ரு தொழுகைக்கு பின், (மற்றவர்களிடம்) பேசுவற்கு முன் (கால்களை அகற்றாமல்) இருப்பில் அமர்ந்தவாறு “லாஇலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, யுஹ்யீ வ யுமீத்து பியதிஹில் கைர் வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்.
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவனே உயிர்க் கொடுப்பவன். அவனே மரணிக்கச் செய்பவன். நன்மைகள் அவன் கைவசமே உள்ளன. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்)
என்று பத்து முறை சொல்கிறவருக்கு ஒவ்வொரு முறைக்கும் பத்து நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) பத்து தீமைகள் அழிக்கப்படும். சொர்க்கத்தில் அவருக்கு பத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படும். ஒவ்வொரு முறைக்கும் அது ஒரு அடிமையை விடுதலை செய்வதற்குச் சமமான நற்பலன் பெற்றுக் கொடுக்கும். அந்த நாள் முழுதும் ஷைத்தானின் தீங்கிலிருந்து அவருக்கு பாதுகாப்பு கிடைக்கும். (அந்த நாளில்) அல்லாஹ்விற்கு இணைவைக்கும் பாவத்தை தவிர வேறு எந்த பாவமும் அவரை அழித்துவிடாது.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
(bazzar-4050: 4050)وَحَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، قَالَ: نَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَبْدِ الْعَزِيزِ، قَالَ: نَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، عَنْ أَبِي ذَرٍّ، رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
مَنْ قَالَ فِي دُبُرِ صَلَاةِ الْفَجْرِ وَهُوَ ثَانِيَ رِجْلَهُ قَبْلَ أَنْ يَتَكَلَّمَ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ بِيَدِهِ الْخَيْرِ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ عَشْرَ مَرَّاتٍ، كَانَ لَهُ بِكُلِّ وَاحِدَةٍ مِنْهُنَّ عَشْرُ حَسَنَاتٍ وَمُحِيَ عَنْهُ بِهَا عَشْرُ سَيِّئَاتٍ وَرُفِعَ لَهُ بِهَا عَشْرُ دَرَجَاتٍ، وَكَانَ لَهُ بِكُلِّ وَاحِدَةٍ مِنْهُنَّ عِدْلُ رَقَبَةٍ وَكَانَ يَوْمُهُ ذَلِكَ فِي حِرْزٍ مِنْ كُلِّ مَكْرُوهٍ مِنَ الشَّيْطَانِ وَلَمْ يُتْبَعْ بِذَنْبٍ يُدْرِكُهُ إِلَّا الشِّرْكُ»
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-4050.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-3449.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க : திர்மிதீ-3474 .
சமீப விமர்சனங்கள்