தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3866

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
உமர்(ரலி) (ஒரு விஷயத்தைப் பற்றி) ‘நான் இதைக் குறித்து இப்படிக் கருதுகிறேன்’ என்று சொல்ல நான் கேட்பேனாயின், அந்த விஷயம் அவர்கள் கூறியதைப் போன்றுதான் இருக்கும். ஒரு முறை உமர்(ரலி) (தம் இடத்தில்) அமர்ந்திருந்த பொழுது அழகான ஒருவர் அவர்களைக் கடந்து சென்றார். அப்போது உமர்(ரலி), ‘ஒன்று நான் (இவர் அஞ்ஞானக் கலாசாரத்தில் இருப்பவர் என்று) நினைத்து தவறாயிருக்க வேண்டும்; அல்லது (நான் நினைத்தது சரியாக இருக்குமானால்) இந்த மனிதர் தம் (பழைய) அஞ்ஞானக் காலத்து மார்க்கத்திலேயே இருக்கவேண்டும்; அல்லது (அஞ்ஞானக் கால) அம்மக்களுக்குக் குறிசொல்பவராக (சோதிடராக) இருந்திருக்க வேண்டும். அந்த மனிதரை என்னிடம் அழைத்து வாருங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர், உமர்(ரலி) அவர்களிடம் அழைத்து வரப்பட்டார். உமர்(ரலி), தாம் (முன்பு சந்தேகத்துடன்) கூறியதையே அந்த மனிதரிடமும் கேட்டார்கள். அந்த மனிதர், (தன்னைப் பற்றி உமர் முன் வைத்த சந்தேகத்தினால் வெறுப்படைந்தவராய்) ‘இன்று ஒரு முஸ்லிமான மனிதருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு போன்று நான் (எப்போதும்) பார்த்ததில்லை’ என்று கூறினார். உமர்(ரலி), ‘நீ எனக்கு (அறியாமைக் காலத்தில் நடந்த) செய்தியைச் சொல்லத் தான் வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘நான் அஞ்ஞானக் காலத்தில் அம்மக்களின் சோதிடனாக (குறிகாரனாக) இருந்தேன்’ என்று கூறினார். உமர்(ரலி), ‘உன்னுடைய பெண் ஜின் உன்னிடம் கொண்டு வந்த செய்திகளிலேயே மிகவும் வியப்புக்குரியது எது?’ என்று கேட்டார்கள். அம்மனிதர், ‘நான் ஒரு நாள் கடைவீதியில் இருந்தபோது, பெட்டை ஜின் என்னிடம் வந்தது. அதனிடம் பீதியைக் கண்டேன். அப்போது ‘ஜின்கள் அடைந்துள்ள அச்சத்தை நீங்கள் பார்க்கவில்லையா? அவை (மேலுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முடியாமல்) தோல்வியுற்றுத் திரும்புவதால் அடைந்துளள நிராசையையும் நீங்கள் பார்க்கவில்லையா? அவை வாலிப ஒட்டகங்களையும் அவற்றின் (சேண இருக்கையின் கீழே விரிக்கப்படும்) துணியையும் பின்பற்றிச் செல்வதைக் காணவில்லையா?’ என்று கேட்டது’ என்று கூறினார். உமர்(ரலி), ‘இவர் உண்மை கூறினார். நான் (கஅபாவில்) இணைவைப்பவர்களின் கடவுள் (சிலை)களுக்கு அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒருவர் காளைக் கன்று ஒன்றைக் கொண்டு வந்து (பலி கொடுத்து) அதை அறுத்தார். அப்போது அசரீரிக் குரல் ஒன்று வந்தது. அதை விடக் கடுமையான குரலில் குரல் கொடுப்பவர் எவரையும் நான் செவிமடுத்ததேயில்லை. அது, ‘பகிரங்கமாகப் பகைத்துக் கொண்டவரே! வெற்றிகரமான ஒரு விஷயம். பேச்சுத் திறனுள்ள ஒருவர், ‘(அல்லாஹ்வே!) வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறெவருமில்லை’ என்று சொல்வார்’ என்று குரல் கொடுத்தது. உடனே (இணை வைக்கம்) மக்கள் குதித்தெழுந்தார்கள். நான், ‘இந்த மர்மக் குரலுக்குப் பின்னால் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ளாமல் விட மாட்டேன்’ என்று சொன்னேன். பிறகு (மீண்டும்) அந்த அசரீரி ‘பகிரங்கமாகப் பகைத்துக் கொண்டவரே! வெற்றிகரமான ஒரு விஷயம். பேச்சுத் திறனுள்ள ஒருவர், ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்று சொல்வார்’ என்று குரல் கொடுத்தது. நான் எழுந்து சென்று விட்டேன். சிறிது காலத்திற்குள்ளாகவே ‘இதோ ஒரு நபி (வந்துவிட்டார்)’ என்று சொல்லப்பட்டது.
Book :63

(புகாரி: 3866)

حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي عُمَرُ، أَنَّ سَالِمًا، حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ

مَا سَمِعْتُ عُمَرَ، لِشَيْءٍ قَطُّ يَقُولُ: إِنِّي لَأَظُنُّهُ كَذَا إِلَّا كَانَ كَمَا يَظُنُّ ” بَيْنَمَا عُمَرُ جَالِسٌ، إِذْ مَرَّ بِهِ رَجُلٌ جَمِيلٌ، فَقَالَ: لَقَدْ أَخْطَأَ ظَنِّي، أَوْ إِنَّ هَذَا عَلَى دِينِهِ فِي الجَاهِلِيَّةِ، أَوْ: لَقَدْ كَانَ كَاهِنَهُمْ، عَلَيَّ الرَّجُلَ، فَدُعِيَ لَهُ، فَقَالَ لَهُ ذَلِكَ، فَقَالَ: مَا رَأَيْتُ كَاليَوْمِ اسْتُقْبِلَ بِهِ رَجُلٌ مُسْلِمٌ، قَالَ: فَإِنِّي أَعْزِمُ عَلَيْكَ إِلَّا مَا أَخْبَرْتَنِي، قَالَ: كُنْتُ كَاهِنَهُمْ فِي الجَاهِلِيَّةِ، قَالَ: فَمَا أَعْجَبُ مَا جَاءَتْكَ بِهِ جِنِّيَّتُكَ، قَالَ: بَيْنَمَا أَنَا يَوْمًا فِي السُّوقِ، جَاءَتْنِي أَعْرِفُ فِيهَا الفَزَعَ، فَقَالَتْ: أَلَمْ تَرَ الجِنَّ وَإِبْلاَسَهَا؟ وَيَأْسَهَا مِنْ بَعْدِ إِنْكَاسِهَا، وَلُحُوقَهَا بِالقِلاَصِ، وَأَحْلاَسِهَا، قَالَ: عُمَرُ صَدَقَ بَيْنَمَا أَنَا نَائِمٌ، عِنْدَ آلِهَتِهِمْ إِذْ جَاءَ رَجُلٌ بِعِجْلٍ فَذَبَحَهُ، فَصَرَخَ بِهِ صَارِخٌ، لَمْ أَسْمَعْ صَارِخًا قَطُّ أَشَدَّ صَوْتًا مِنْهُ يَقُولُ: يَا جَلِيحْ، أَمْرٌ نَجِيحْ، رَجُلٌ فَصِيحْ، يَقُولُ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَوَثَبَ القَوْمُ، قُلْتُ: لاَ أَبْرَحُ حَتَّى أَعْلَمَ مَا وَرَاءَ هَذَا، ثُمَّ نَادَى: يَا جَلِيحْ، أَمْرٌ نَجِيحْ، رَجُلٌ فَصِيحْ، يَقُولُ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَقُمْتُ، فَمَا نَشِبْنَا أَنْ قِيلَ: هَذَا نَبِيٌّ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.