பாடம் : 41
இஸ்ராஉ பற்றிய நபிமொழியும் அதுபற்றிய (17:1) இறைவசனமும்.
அல்லாஹ் கூறுகிறான்:
ஓர் இரவி(ன் ஒரு சிறு பகுதியி)ல் தன் அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (வெகு தொலைவில் அமைந்த) அல் மஸ்ஜிதுல் அக்ஸா வரையில், தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காட்டுவதற்காக,அழைத்துச் சென்ற (இறை)வன் மிகத் தூயவன். (அல் அக்ஸா பள்ளியான) அதன் சுற்றுப்புறங்களை நாம் அருள் வளம் மிக்கதாய் ஆக்கினோம். (17:1)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நான் இரவின் சிறு பகுதியில் கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்றதாகச் சொன்ன சமயம்) என்னை குறைஷிகள் நம்ப மறுத்தபோது நான் கஅபாவின் ‘ஹிஜ்ர்’ என்னும் (வளைந்த) பகுதியில் நின்றேன். அல்லாஹ் எனக்கு பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். அப்போது அதைப் பார்த்தபடியே நான் அவர்களுக்கு அதன் அடையாளங்களை விவரிக்கலானேன். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.
Book : 63
بَابُ حَدِيثِ الإِسْرَاءِ
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ المَسْجِدِ الحَرَامِ إِلَى المَسْجِدِ الأَقْصَى} [الإسراء: 1]
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«لَمَّا كَذَّبَتْنِي قُرَيْشٌ، قُمْتُ فِي الحِجْرِ، فَجَلاَ اللَّهُ لِي بَيْتَ المَقْدِسِ، فَطَفِقْتُ أُخْبِرُهُمْ عَنْ آيَاتِهِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِ»
சமீப விமர்சனங்கள்