இப்ராஹீம் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப் (ரஹ்) அறிவித்தார்.
(என் தந்தை) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களிடம் (அவர்கள் நோன்பை நிறைவு செய்யும் நேரத்தில்) உணவு கொண்டு வரப்பட்டது. (அன்று பகல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள்.
அப்போது அவர்கள் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் (உஹுதுப் போரில்) கொல்லப்பட்டார்கள் – அவர் என்னை விடச் சிறந்தவர் – அவர் ஒரு சால்வையால் கஃபனிடப்பட்டார். (அந்த சால்வையால்) அவரின் தலை மூடப்பட்டால், அவரின் இரண்டு கால்கள் வெளியில் தெரிந்தன. அவரின் இரு கால்கள் (அதனால்) மூடப்பட்டால், தலை வெளியில் தெரிந்தது’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் இப்ராஹீம்(ரஹ்) கூறினார்:
மேலும், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), (பின்வருமாறு) கூறினார்கள் என எண்ணுகிறேன்.
ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் (ரலி) (உஹுதுப் போரில்) கொல்லப்பட்டார்கள். அவர் என்னை விடச் சிறந்தவர். (அவரும் அது போன்றே பற்றாக்குறை மிக்க சிறிய சால்வையாலேயே கஃபனிப்பட்டார்)
பிறகு (அந்த ஏழ்மை நிலை நம்மை விட்டும் நீங்கி, இதோ, நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவுக்கு நமக்கு இந்த உலகின் வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அல்லது இந்த உலக(ச் செல்வத்)திலிருந்து (இதோ, நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவுக்கு நமக்கு தரப்பட்டது – நாங்கள் புரிந்த நல்லறங்களுக்குப் பிரதிபலன் மிக விரைவாக (இவ்வுலகிலேயே) நமக்குக் கொடுக்கப்பட்டு விட்டதோ என்று நாம் அஞ்சுகிறோம்’ என்று கூறினார்கள். பிறகு (தமக்காகப் கொண்டு வரப்பட்ட) உணவை (உண்ணாமல் அப்படியே) விட்டுவிட்டு அழலானார்கள்.
Book :64
حَدَّثَنَا عَبْدَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ إِبْرَاهِيمَ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ،
أُتِيَ بِطَعَامٍ، وَكَانَ صَائِمًا، فَقَالَ: قُتِلَ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَهُوَ خَيْرٌ مِنِّي، كُفِّنَ فِي بُرْدَةٍ: إِنْ غُطِّيَ رَأْسُهُ بَدَتْ رِجْلاَهُ، وَإِنْ غُطِّيَ رِجْلاَهُ بَدَا رَأْسُهُ، وَأُرَاهُ قَالَ: وَقُتِلَ حَمْزَةُ وَهُوَ خَيْرٌ مِنِّي، ثُمَّ بُسِطَ لَنَا مِنَ الدُّنْيَا مَا بُسِطَ، أَوْ قَالَ: أُعْطِينَا مِنَ الدُّنْيَا مَا أُعْطِينَا، وَقَدْ خَشِينَا أَنْ تَكُونَ حَسَنَاتُنَا عُجِّلَتْ لَنَا، ثُمَّ جَعَلَ يَبْكِي حَتَّى تَرَكَ الطَّعَامَ
சமீப விமர்சனங்கள்