பாடம்: 6
ஸலாம் கூறுவதை பரப்புதல்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திடம் ஏற்பட்ட பொறாமை, குரோதம் எனும் நோய் உங்களுக்கும் ஏற்பட்டு விட்டது. அவை தான் மழித்துவிடக் கூடியது. அவை முடியை மழிக்கும் என்று நான் கூறவில்லை. மாறாக மார்க்கத்தை மழித்து விடும்.
“( இந்த) முஹம்மதின் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்)
அறிவிப்பவர் : யயீஷ் பின் வலீத் (ரஹ்)
(musannaf-abdur-razzaq-20339: 20339)6- بَابُ إِفْشَاءِ السَّلاَمِ.
أخبرنا عبد الرزاق، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَن يَحيَى بنِ أَبِي كَثِيرٍ، عَن يَعِيشَ بْنِ الْوَلِيدِ، رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
دَبَّ إِلَيْكُمْ دَاءُ الأُمَمِ: الْحَسَدُ، وَالْبَغْضَاءُ، وَهِيَ الْحَالِقَةُ، لاَ أَقُولُ: تَحْلِقُ الشَّعَرَ، وَلَكِنَّهَا تَحْلِقُ الدِّينَ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لاَ تَدْخُلُوا الْجَنَّةَ، حَتَّى تُؤْمِنُوا، وَلاَ تُؤْمِنُوا، حَتَّى تَحَابُّوا، أَفَلاَ أُخْبِرُكُمْ بِشَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ، أَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ.
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-20339.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்