தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4053

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
தன் மீது கடன் இருக்கும் நிலையில் ஆறு பெண் மக்களை (அநாதைகளாக)விட்டுவிட்டு என் தந்தை உஹுதுப்போரில் உயிர்த் தியாகியாகக் கொல்லப்பட்டார். பேரீச்சம் பழங்களைக் கொய்யும் (அறுவடைக்) காலம் வந்தபோது, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று, ‘என் தந்தை உஹுதுப் போரில் உயிர்த் தியாகியாகக் கொல்லப்பட்டார் என்பது தங்களுக்குத் தெரியும். அவர் நிறையக் கடனையும்விட்டுச் சென்றுள்ளார். கடன்காரர்கள் தங்களைச் சந்திக்க வேண்டுமென விரும்புகிறேன்’ என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ சென்று எல்லாப் பேரீச்சங் கனிகளையும் களத்தில் ஒரு மூலையில் (தனித் தனியாகக்) குவித்து வை!’ என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்தேன். நபி(ஸல்) அவர்கள் கண்டபோது, அதில் பெரிய குவியலை மூன்று முறை சுற்றி வந்து அதன் அருகே அமர்ந்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களைக் கண்டபோது என்னால் ஆத்திரமூட்டப்பட்டவர்களைப் போல் அந்த நேரத்தில் தெரிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கண்டபோது, அதில் பெரிய குவியலை மூன்று முறை சுற்றி வந்து அதன் அருகே அமர்ந்தார்கள். பிறகு, ‘உன் (கடன்காரத்) தோழர்களைக் கூப்பிடு’ என்று கூறினார்கள். (பிறகு) நபி(ஸல்) அவர்கள் (பேரீச்சங் கனிகளை) அவர்களுக்கு அளந்து கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். என் தந்தையின் (கடன்) பொறுப்பை அல்லாஹ் நிறைவேற்றிவிட்டான். நானோ, ‘அல்லாஹ் என் தந்தையின் (கடன்) பொறுப்பை நிறைவேற்றினால் போதும். என் சகோதரிகளிடம் ஒரு பேரீச்சம் பழத்துடன் திரும்பிச் செல்லாவிட்டாலும் கூடப் பரவாயில்லை’ என்று திருப்திப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பேரீச்சம் பழக் குவியல்கள் முழுவதையும் (தீர்ந்து போகாமல்) அல்லாஹ் பாதுகாத்தான். எந்த அளவுக்கென்றால் நபி(ஸல்) அவர்கள் அமர்ந்திருத்த அந்தக் குவியலில் ஒரு பேரீச்சங்கனி கூட குறையாமலிருந்ததை பார்த்தேன்.
Book :64

(புகாரி: 4053)

حَدَّثَنِي أَحْمَدُ بْنُ أَبِي سُرَيْجٍ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ: حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّ أَبَاهُ، اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ عَلَيْهِ دَيْنًا، وَتَرَكَ سِتَّ بَنَاتٍ، فَلَمَّا حَضَرَ جِزَازُ النَّخْلِ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: قَدْ عَلِمْتَ أَنَّ وَالِدِي قَدِ اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ وَتَرَكَ دَيْنًا كَثِيرًا، وَإِنِّي أُحِبُّ أَنْ يَرَاكَ الغُرَمَاءُ، فَقَالَ: «اذْهَبْ فَبَيْدِرْ كُلَّ تَمْرٍ عَلَى نَاحِيَةٍ»، فَفَعَلْتُ ثُمَّ دَعَوْتُهُ، فَلَمَّا نَظَرُوا إِلَيْهِ كَأَنَّهُمْ أُغْرُوا بِي تِلْكَ السَّاعَةَ، فَلَمَّا رَأَى مَا يَصْنَعُونَ أَطَافَ حَوْلَ أَعْظَمِهَا بَيْدَرًا ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ جَلَسَ عَلَيْهِ، ثُمَّ قَالَ: «ادْعُ لِي أَصْحَابَكَ» فَمَا زَالَ يَكِيلُ لَهُمْ حَتَّى أَدَّى اللَّهُ عَنْ وَالِدِي أَمَانَتَهُ، وَأَنَا أَرْضَى أَنْ يُؤَدِّيَ اللَّهُ أَمَانَةَ وَالِدِي، وَلاَ أَرْجِعَ إِلَى أَخَوَاتِي بِتَمْرَةٍ، فَسَلَّمَ اللَّهُ البَيَادِرَ كُلَّهَا، وَحَتَّى إِنِّي أَنْظُرُ إِلَى البَيْدَرِ الَّذِي كَانَ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّهَا لَمْ تَنْقُصْ تَمْرَةً وَاحِدَةً





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.