நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. (நேசத்தை ஏற்படுத்தும்) அவசியமான ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அறிவிப்பாளர் ஷரீக் (ரஹ்) இந்த செய்தியை சில நேரம் சிறிது வார்த்தை மாற்றத்துடன் அறிவித்துள்ளார்.
(முஸ்னது அஹ்மத்: 9084)حَدَّثَنَا أَسْوَدُ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ يَرْفَعُهُ، قَالَ:
«لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُونَ حَتَّى تَحَابُّوا، أَلَا أَدُلُّكُمْ عَلَى رَأْسِ ذَلِكَ، أَوْ مِلَاكِ ذَلِكَ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ» ،
وَرُبَّمَا قَالَ شَرِيكٌ: «أَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-9084.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8879.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஷரீக் பின் அப்துல்லாஹ் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க : முஸ்லிம்-93 .
சமீப விமர்சனங்கள்