தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-10650

A- A+


ஹதீஸின் தரம்: More Info

“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. நீங்கள் விரும்பினால் ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள். (அதனால் நீங்கள் நேசம் கொள்ளலாம்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 10650)

حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

وَاللَّهِ، لَا تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا. قَالَ: إِنْ شِئْتُمْ دَلَلْتُكُمْ عَلَى مَا إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ، أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-10650.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-10426.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூபக்ர் பின் அய்யாஷ் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க : முஸ்லிம்-93 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.