தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4066

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 இரு படைகள் மோதிக் கொண்ட நாளில் உங்களில் யார் புறங்காட்டி ஓடினார்களோ, அவர்கள் செய்த சில தவறுகள் காரணமாகத் தான் ஷைத்தான் அவர்களை அடிசறுக்கச் செய்தான். (எனினும்) அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மன்னித்து விட்டான். திண்ணமாக, அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் சகிப்புத் தன்மையுடையவனுமாய் இருக்கின்றான் என்னும் (3:155)இறை வசனம்.
 உஸ்மான் இப்னு மவ்ஹப்(ரஹ்) அறிவித்தார்.
இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்ய (எகிப்து வாசியான) ஒருவர் வந்தார். அப்போது ஒரு கூடடத்தார் (அங்கே) அமர்ந்திருப்பதைக் கண்டு, ‘இந்தக் கூடடத்தார் யார்?’ என்று கேட்டார். மக்கள், ‘இவர்கள் குறைஷிகள்’ என்று கூறினர். அவர், ‘(இவர்களில்) முதிர்ந்த அறிஞர் யார்?’ என்று கேட்டார். மக்கள், ‘அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள்’ என்று பதிலளித்தனர். பிறகு அவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் சென்று, ‘(இப்னு உமர் அவர்களே!) நான் தங்களிடம் ஒரு விஷயம் பற்றிக் கேட்பேன். நீங்கள் எனக்கு அதைப்பற்றி (பதில்) சொல்வீர்களா? இந்த இறையில்லத்தின் புனிதத்தை முன்வைத்து தங்களிடம் கேட்கிறேன்; உஸ்மான் இப்னு அஃப்பான் உஹுது போரில் நாளில் (போர்க்களத்திலிருந்து) வெருண்டோடியத்தைத் தாங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), ‘ஆம் (அறிவேன்)’ என்று பதிலளித்தார்கள். அவர், ‘உஸ்மான்(ரலி), பத்ருப்போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க, இப்னு உமர்(ரலி), ‘ஆம் (தெரியும்)’ என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், ‘அவர் (ஹுதைபிய்யாவில் நடந்த) ‘பைஅத்துர் ரிள்வான்’ சத்தியப் பிரமாணத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்க, இப்னு உமர்(ரலி), ‘ஆம் (தெரியும்)’ என்று பதிலளித்தார்கள். (இவற்றைக் கேட்டுவிட்டு) அந்த மனிதர், (உஸ்மான்(ரலி), தாம் நினைத்திருந்தது போன்றே இவ்வளவு குறைகளையும் கொண்டவர்கள் தாம் என்று தொனிக்கும்படி) ‘அல்லாஹ் அக்பர் அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று கூறினார்.
இப்னு உமர்(ரலி) கூறினார்: ‘வா! (இவற்றிற்கெல்லாம் உஸ்மான்(ரலி) ஏன் பங்கு பெறவில்லையென்று) நீ கேட்டது பற்றி உனக்கு நான் விளக்குகிறேன்.
உஸ்மான்(ரலி) உஹுதுப போரின்போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான் என்று நானே சாட்சியம் கூறுகிறேன்.
பத்ருப் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மகள் (ருகய்யா – ரலி – அவர்கள்) உஸ்மானுடைய மனைவியாக இருந்தார்கள். அப்போது அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், உஸ்மான்(ரலி) அவர்களிடம், ‘பத்ருப் போரில் பங்கெடுத்த ஒரு மனிதருக்குரிய (மறுமைப்) பலனும் (போர்ச் செல்வத்தில்) அவரின் பங்கும் உங்களுக்குக் கிடைக்கும். (நீங்கள் உங்கள் மனைவியைப் போய்க் கவனியுங்கள்)’ என்று கூறினார்கள். (எனவேதான் அவர்கள் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.)
பைஅத்துர் ரிள்வான் சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான்(ரலி) அவர்களை விட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் உஸ்மான் அவர்களுக்கு பதிலாக அவரை நபி(ஸல்) அவர்கள் (குறைஷிகளிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை;) எனவேதான், உஸ்மான்(ரலி) அவர்களை அனுப்பினார்கள். மேலும், இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான்(ரலி) மக்காவிற்குப் போன பின்புதான் நடைபெற்றது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வலக்கையைச் சுட்டிக் காட்டி, ‘இது உஸ்மானுடைய கை’ என்று சொல்லி அதைத் தம் இடக்கையின் மீது தட்டினார்கள். பிறகு, ‘(இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்’ என்று கூறினார்கள்.’ (இவ்வாறு இப்னு உமர்(ரலி) கூறிவிட்டு, உஸ்மான்(ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணி வைத்திருந்த) அந்த மனிதரிடம், ‘நான் சொன்ன இந்த பதில்களை எடுத்துக் கொண்டு இப்போது நீ போகலாம்’ என்று கூறினார்கள்.
Book : 64

(புகாரி: 4066)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: {إِنَّ الَّذِينَ تَوَلَّوْا مِنْكُمْ يَوْمَ التَقَى الجَمْعَانِ إِنَّمَا اسْتَزَلَّهُمُ الشَّيْطَانُ بِبَعْضِ مَا كَسَبُوا وَلَقَدْ عَفَا اللَّهُ عَنْهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ} [آل عمران: 155]

حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ، عَنْ عُثْمَانَ بْنِ مَوْهَبٍ، قَالَ

جَاءَ رَجُلٌ حَجَّ البَيْتَ، فَرَأَى قَوْمًا جُلُوسًا، فَقَالَ: مَنْ هَؤُلاَءِ القُعُودُ؟ قَالُوا: هَؤُلاَءِ قُرَيْشٌ. قَالَ: مَنِ الشَّيْخُ؟ قَالُوا ابْنُ عُمَرَ، فَأَتَاهُ فَقَالَ: إِنِّي سَائِلُكَ عَنْ شَيْءٍ أَتُحَدِّثُنِي؟ قَالَ: أَنْشُدُكَ بِحُرْمَةِ هَذَا البَيْتِ، أَتَعْلَمُ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَرَّ يَوْمَ أُحُدٍ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَتَعْلَمُهُ تَغَيَّبَ عَنْ بَدْرٍ، فَلَمْ يَشْهَدْهَا؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَتَعْلَمُ أَنَّهُ تَخَلَّفَ عَنْ بَيْعَةِ الرِّضْوَانِ فَلَمْ يَشْهَدْهَا؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَكَبَّرَ، قَالَ ابْنُ عُمَرَ: تَعَالَ لِأُخْبِرَكَ وَلِأُبَيِّنَ لَكَ عَمَّا سَأَلْتَنِي عَنْهُ، أَمَّا فِرَارُهُ يَوْمَ أُحُدٍ فَأَشْهَدُ أَنَّ اللَّهَ عَفَا عَنْهُ، وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَدْرٍ، فَإِنَّهُ كَانَ تَحْتَهُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ مَرِيضَةً، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لَكَ أَجْرَ رَجُلٍ مِمَّنْ شَهِدَ بَدْرًا وَسَهْمَهُ» وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَيْعَةِ الرِّضْوَانِ، فَإِنَّهُ لَوْ كَانَ أَحَدٌ أَعَزَّ بِبَطْنِ مَكَّةَ مِنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ لَبَعَثَهُ مَكَانَهُ، فَبَعَثَ عُثْمَانَ، وَكَانَتْ بَيْعَةُ الرِّضْوَانِ بَعْدَمَا ذَهَبَ عُثْمَانُ إِلَى مَكَّةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ اليُمْنَى: «هَذِهِ يَدُ عُثْمَانَ – فَضَرَبَ بِهَا عَلَى يَدِهِ، فَقَالَ – هَذِهِ لِعُثْمَانَ» اذْهَبْ بِهَذَا الآنَ مَعَكَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.