(இப்னு உமர் – ரலி – அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாரின் முன்னாள் அடிமை) நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), குழப்ப(ம் நிறைந்த கால)த்தில் உம்ராவிற்காக (மக்காவிற்குப்) புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது அவர்கள், ‘நான் கஅபாவிற்குச் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டால், நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் (சென்று தடுக்கப்பட்ட ஹுதைபிய்யா சம்பவத்தின் போது) செய்தது போல் செய்வோம்’ என்று கூறிவிட்டு, உம்ராவிற்காக (இஹ்ராம் அணிந்து) ‘தல்பியா’ கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா ஆண்டில் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்ததே இதற்குக் காரணமாகும்.
Book :64
حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، خَرَجَ مُعْتَمِرًا فِي الفِتْنَةِ، فَقَالَ: إِنْ صُدِدْتُ عَنِ البَيْتِ صَنَعْنَا كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَهَلَّ بِعُمْرَةٍ، مِنْ أَجْلِ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَهَلَّ بِعُمْرَةٍ عَامَ الحُدَيْبِيَةِ»
சமீப விமர்சனங்கள்