நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.
(அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் – ரலி – அவர்களை ஹஜ்ஜாஜின் ராணுவம் முற்றுகையிட்டிருந்த குழப்பமான கால கட்டத்தில், உம்ராவிற்காக மக்காவிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்த) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் புதல்வர்களில் ஒருவர் – உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ், சாலிம் இப்னு அப்தில்லாஹ் ஆகிய இருவரும் என ஓர் அறிவிப்பில் காணப்படுகிறது- ‘இந்த ஆண்டு தாங்கள் (உம்ராவிற்குச் செல்லாமல் இங்கேயே) தங்கிவிடலாமே. ஏனென்றால், நீங்கள் கஅபாவிற்குச் சென்று சேர மாட்டீர்கள் என்று நான் அஞ்சுகிறேன்’ என்று கூறினார். அதற்கு அவர்கள், ‘நாங்கள் (ஹுதைபிய்யா ஆண்டு) நபி(ஸல்) அவர்களுடன் (உம்ரா செய்வதற்காக மக்கா) புறப்பட்டுச் சென்றோம்; அப்போது, குறைஷி குல இறைமறுப்பாளர்கள் எங்களை கஅபாவுக்குச் செல்லவிடாமல் தடுத்தனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் தங்களின் தியாகப் பிராணிகளை அறுத்துவிட்டுத் (தம்) தலையை மழித்துக் கொண்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் தலைமுடியை குறைத்துக் கொண்டனர். (அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்.)’ என்று கூறினார்கள். தொடர்ந்து அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), ‘நான் உம்ரா செய்ய முடிவு செய்து விட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன். கஅபாவிற்குச் செல்ல எனக்கு வழி விடப்பட்டால் வலம்வருவேன். அங்கு செல்ல முடியாதவாறு நான் தடுக்கப்பட்டால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்தது போன்று நானும் செய்வேன்’ என்று கூறினார்கள். பின்னர் சிறிது நேரம் நடந்துவிட்டு, ‘(இஹ்ராமிலிருந்து விடுபடுகிற விஷயத்தில் ஹஜ், உம்ரா ஆகிய) அந்த இரண்டையும் நான் ஒன்று போன்றே கருதுகிறேன். நான் என் உம்ராவுடன் ஹஜ்ஜையும் (என் மீது) கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன்’ என்று கூறினார்கள். (பிறகு மக்காவிற்குப் போன போது) ஒரேயொரு தவாஃபும் ஒரேயொரு சஃயும் செய்து (ஹஜ் உம்ரா ஆகிய) இரண்டிலிருந்தும் விடுபட்டார்கள்.
Book :64
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، وَسَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَاهُ: أَنَّهُمَا كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ح وحَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ
أَنَّ بَعْضَ بَنِي عَبْدِ اللَّهِ، قَالَ لَهُ: لَوْ أَقَمْتَ العَامَ، فَإِنِّي أَخَافُ أَنْ لاَ تَصِلَ إِلَى البَيْتِ قَالَ: ” خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ البَيْتِ، فَنَحَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَدَايَاهُ، وَحَلَقَ وَقَصَّرَ أَصْحَابُهُ، وَقَالَ: أُشْهِدُكُمْ أَنِّي أَوْجَبْتُ عُمْرَةً، فَإِنْ خُلِّيَ بَيْنِي وَبَيْنَ البَيْتِ طُفْتُ، وَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَ البَيْتِ، صَنَعْتُ كَمَا صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَارَ سَاعَةً، ثُمَّ قَالَ: مَا أُرَى شَأْنَهُمَا إِلَّا وَاحِدًا، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ حَجَّةً مَعَ عُمْرَتِي، فَطَافَ طَوَافًا وَاحِدًا، وَسَعْيًا وَاحِدًا، حَتَّى حَلَّ مِنْهُمَا جَمِيعًا
சமீப விமர்சனங்கள்