தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-444

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பனூ இஸ்ரவேலர்களுக்கு ஏற்பட்ட அதே நிலை சரிக்கு சமமாக எனது சமுதாயத்திற்கும் ஏற்படும். எந்தளவுக்கென்றால், அவர்களில் சிலர் பகிரங்கமாக தன் தாயை மணமுடித்ததைப் போன்று எனது சமுதாயத்திலும் அவ்வாறு செய்பவர்கள் தோன்றுவர்.

பனூ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு மார்க்கமுடையவர்களாக பிரிந்தனர். எனது சமுதாயத்தினர் எழுபத்தி மூன்று மார்க்கமுடையவர்களாக பிரிவர். அனைவரும் நரகம் செல்வர். ஒரு மார்க்கத்தை (பின்பற்றியவர்களை)த் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அந்த ஒரு கூட்டத்தினர் யார்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்றைய தினம் நானும் எனது தோழர்களும் எதில் இருக்கிறோமோ அதில் இருப்பவர்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(ஹாகிம்: 444)

فَأَخْبَرَنَاهُ عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ الْحَكِيمِيُّ بِبَغْدَادَ، ثنا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، ثنا ثَابِتُ بْنُ مُحَمَّدٍ الْعَابِدُ، ثنا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَيَأْتِيَنَّ عَلَى أُمَّتِي مَا أَتَى عَلَى بَنِي إِسْرَائِيلَ مِثْلًا بِمِثْلٍ حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ، حَتَّى لَوْ كَانَ فِيهِمْ مَنْ نَكَحَ أُمَّهُ عَلَانِيَةً كَانَ فِي أُمَّتِي مِثْلَهُ، إِنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقُوا عَلَى إِحْدَى وَسَبْعِينَ مِلَّةً، وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهَا فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً» فَقِيلَ لَهُ: مَا الْوَاحِدَةُ؟ قَالَ: «مَا أَنَا عَلَيْهِ الْيَوْمَ وَأَصْحَابِي»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-444.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-407.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துர்ரஹ்மான் பின் ஸியாத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : திர்மிதீ-2641 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.