தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-222

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் பெயர் கூறாமல் உளூச் செய்தவர் உளூச் செய்தவராக ஆகமாட்டார். உளூச்செய்யாமல் தொழுதவர் தொழுதவராக ஆகமாட்டார். என்னை நேசிக்காதவர் இறைநம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார். அன்ஸாரீ நபித்தோழர்களை நேசிக்காதவர் என்னை நேசித்தவராக ஆகமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(daraqutni-222: 222)

نا ابْنُ صَاعِدٍ , نا مَحْمُودُ بْنُ مُحَمَّدٍ أَبُو يَزِيدَ الظَّفَرِيُّ , نا أَيُّوبُ بْنُ النَّجَّارِ , عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ , عَنْ أَبِي سَلَمَةَ , عَنْ أَبِي هُرَيْرَةَ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَا تَوَضَّأَ مَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ , وَمَا صَلَّى مَنْ لَمْ يَتَوَضَّأْ , وَمَا آمَنَ بِي مَنْ لَمْ يُحِبَّنِي , وَمَا أَحَبَّنِي مَنْ لَمْ يُحِبَّ الْأَنْصَارَ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-222.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-192.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மஹ்மூத் பின் முஹம்மது பலவீனமானவர் என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் விமர்சித்துள்ளார்கள். மேலும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இதில் வரும் அய்யூப் பின் நஜ்ஜார் என்பவர் யஹ்யா பின் கஸீரிடம் ஆதம் (அலை) அவர்களும், மூஸா (அலை) அவர்களும் தர்கித்துக்கொண்டனர் என்ற செய்தியை தவிர வேறு எதையும் செவியேற்கவில்லை என்று கூறியுள்ளார்கள்.

(நூல்: லிஸானுல் மீஸான் 8 / 9 )

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : அபூதாவூத்-101 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.