தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-13610

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஒரு மனிதன் கப்ரில் வைக்கப்பட்டவுடன் அவனிடத்தில் இரு வானவர்கள் வந்து உன்னை ஒரு அடி அடிக்கப்போகிறோம்! என்று கூறுவர். என்ன காரணத்திற்காக அடிக்கப்போகிறீர்கள்? என்று அந்த மனிதன் கேட்பான். அதற்குள் அவ்விருவரும் அவனை ஒரு அடி அடித்துவிடுவார்கள். அதனால் அவனின் கப்ர் முழுவதும் நெருப்பாகிவிடும். அவனை அப்படியே விட்டுவிடுவார்கள். பயம் நீங்கி, தெளிவடைந்து எதற்காக என்னை அடித்தீர்கள்? என்று அவன் கேட்பான்.

அதற்கவர்கள், நீ உளூவின்றி ஒரு தொழுகையை தொழுதாய். அநீதமிழைக்கப்பட்டவனைக் கண்டும் அவனுக்கு உதவி செய்யாமல் அவனைக் கடந்து சென்றாய். (அதற்காகவே நாங்கள் அடித்தோம்) என்று அவ்விரு வானவர்களும் கூறுவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

 

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13610)

حَدَّثَنَا أَبُو شُعَيْبٍ الْحَرَّانِيُّ، ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ الْبَابْلُتِّيُّ، ثنا أَيُّوبُ بْنُ نَهِيكٍ، قَالَ: سَمِعْتُ عَطَاءَ بْنَ أَبِي رَبَاحٍ، يَقُولُ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

يَوْمَ أُدْخِلَ رَجُلٌ فِي قَبْرِهِ، فَأَتَاهُ مَلَكَانَ فَقَالَا لَهُ: إِنَّا ضَارِبُوكَ ضَرْبَةً، فَقَالَ لَهُمَا: عَلَامَ تَضْرِبَانِي؟ فَضَرَبَاهُ ضَرْبَةً امْتَلَأَ قَبْرُهُ مِنْهَا نَارًا، فَتَرَكَاهُ حَتَّى أَفَاقَ وَذَهَبَ عَنْهُ الرُّعْبُ، فَقَالَ لَهُمَا عَلَامَ ضَرَبْتُمَانِي؟ فَقَالَا: إِنَّكَ صَلَّيْتَ صَلَاةً، وَأَنْتَ عَلَى غَيْرِ طُهُورٍ، وَمَرَرْتَ بِرَجُلٍ مَظْلُومٍ وَلَمْ تَنْصُرْهُ


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-13610.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-13444.




إسناد ضعيف فيه يحيى بن عبد الله البابلتي وهو ضعيف الحديث ، وأيوب بن نهيك الحلبي وهو ضعيف الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஹ்யா பின் அப்துல்லாஹ், அய்யூப் பின் நஹீக் போன்றோர் பலவீனமானவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-755 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.