தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-5114

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமைநாள் வருவதற்குமுன், தனக்கு எவரும் இணையில்லாதவனான அல்லாஹ்வை (மட்டுமே) வணங்கப்படவேண்டும் என்பதற்கு வாளைக் கொண்டு (போர் செய்ய வேண்டிய நிலைக்கு) நான் அனுப்பப்பட்டுவிட்டேன்.

(போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய) எனது செல்வம் என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே உள்ளது. எவர் என் கட்டளைக்கு மாறுசெய்கிறாரோ, அவர் மீது பணிந்திருப்பதும், (ஜிஸ்யா) காப்புவரி செலுத்துவதும் கடமையாகும்.

யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 5114)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ يَعْنِي الْوَاسِطِيَّ، أَخْبَرَنَا ابْنُ ثَوْبَانَ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«بُعِثْتُ بِالسَّيْفِ حَتَّى يُعْبَدَ اللَّهُ لَا شَرِيكَ لَهُ، وَجُعِلَ رِزْقِي تَحْتَ ظِلِّ رُمْحِي، وَجُعِلَ الذِّلَّةُ، وَالصَّغَارُ عَلَى مَنْ خَالَفَ أَمْرِي، وَمَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-5114.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-4969.




மேலும் பார்க்க: அபூதாவூத்-4031 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.