தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-10342

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் பயணம் மேற்கொள்ளுங்கள். ஏனெனில் இரவு நேரத்தில் தான் பூமி சுருட்டப்படுகிறது (சுருக்கப்படுகிறது).

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(பைஹகீ-குப்ரா: 10342)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ , أنا بَكْرُ بْنُ مُحَمَّدٍ الصَّيْرَفِيُّ , بِمَرْوَ , ثنا عَبْدُ الصَّمَدِ بْنُ الْفَضْلِ الْبَلْخِيُّ , ثنا خَالِدُ بْنُ يَزِيدَ الْعُمَرِيُّ , ثنا أَبُو جَعْفَرٍ الرَّازِيُّ , عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

عَلَيْكُمْ بِالدُّلْجَةِ فَإِنَّ الْأَرْضَ تُطْوَى بِاللَّيْلِ

رَوَاهُ أَبُو دَاوُدَ , عَنْ عَمْرِو بْنِ عَلِيٍّ , عَنْ خَالِدِ بْنِ يَزِيدَ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-10342.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூஜஃபர்- ஈஸா பின் மாஹான் பற்றி சிலர் பலமானவர் என்று கூறியிருந்தாலும் சிலர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சித்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் 4 / 503 ).எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • காலித் பின் யஸீத் அல்உமரிய்யு என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர். ஆனால் இந்த (ஹாகிம்) நூலில் வரும் காலித் பின் யஸீத் என்பவர் அல்உமரிய்யு என்ற பெயருடையவராக கூறப்பட்டிருப்பது தவறு என ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    கூறியுள்ளார்…

மேலும் பார்க்க : அபூதாவூத்-2571 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.