பாடம்: 3
இறைநம்பிக்கையின் செயல்கள்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் முகங்களை நீங்கள் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக, நன்மை புரிவோர் யாரெனில், அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் நம்பிக்கை கொண்டவர்கள்தான். அவர்கள் (தமது) செல்வத்தைத் தாம் விரும்பினாலும்கூட அதை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகள் மீட்புக்கும் வழங்குவார்கள்; தொழுகையைக் கடைப்பிடிப்பார்கள்; ஸகாத் (எனும் கடமையான தர்மத்)தை வழங்குவார்கள்; வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவார்கள்; வறுமையிலும், நோய் நொடியிலும், போர்க் காலத்திலும் பொறுமைகாப்பார்கள். அவர்களே வாய்மையாளர்கள். அவர்களே இறையச்சமுடையோர். (அல்குர்ஆன்: 2:177)
(மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:) இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி அடைந்துவிட்டனர். அவர்கள் தமது தொழுகையில் உள்ளச்சம் உடையவர்களாக இருப்பார்கள்; வீணானவற்றிலிருந்து விலகியிருப்பார்கள்… (அல்குர்ஆன்: 23:1-9)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையே.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம்: 2
(புகாரி: 9)بَابُ أُمُورِ الإِيمَانِ
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {لَيْسَ البِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ المَشْرِقِ وَالمَغْرِبِ، وَلَكِنَّ البِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ وَالمَلاَئِكَةِ وَالكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى المَالَ عَلَى حُبِّهِ ذَوِي القُرْبَى وَاليَتَامَى وَالمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ، وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ، وَأَقَامَ الصَّلاَةَ، وَآتَى الزَّكَاةَ، وَالمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا، وَالصَّابِرِينَ فِي البَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ البَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ المُتَّقُونَ} [البقرة: 177] وَقَوْلِهِ: {قَدْ أَفْلَحَ المُؤْمِنُونَ} [المؤمنون: 1] الآيَةَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الجُعْفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ العَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«الإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً، وَالحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ»
Bukhari-Tamil-9.
Bukhari-TamilMisc-9.
Bukhari-Shamila-9.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்த செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1. புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2. அப்துல்லாஹ் பின் முஹம்மத் அல்ஜுஹ்பீ
3. அபூ ஆமிர்-அல்அகதீ
4. ஸுலைமான் பின் பிலால்
5. அப்துல்லாஹ் பின் தீனார்
6.அபூஸாலிஹ்-தக்வான்
7.அபூஹுரைரா(ரலி)
சமீப விமர்சனங்கள்