பாடம் : 16 (நபியே!) வேதம் வழங்கப்பட்டவர்களிடம் நீங்கள் எத்தனைச் சான்றுகளைக் கொண்டு வந்தாலும் உங்கள் கிப்லாவை அவர்கள் பின்பற்றப்போவதில்லை. நீங்களும் அவர் களின் கிப்லாவைப் பின்பற்றுவரல்லர். இன்னும் அவர்களில் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரின் கிப்லாவைப் பின்பற்றுவோ ராயும் இல்லை. எனவே, உங்களுக்கு (வஹீ மூலம்) மெய்யறிவு வந்த பின்னரும் அவர்களின் சுயவிருப்பங்களை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் நீங்களும் அக்கிரமக் காரர்களில் (ஒருவராக) ஆகிவிடுவீர்கள் (எனும் 2:145ஆவது இறைவசனம்).
இப்னு உமர்(ரலி) கூறினார்.
மக்கள் குபாவில் ‘சுப்ஹு’த் தொழுகையில் இருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, ‘சென்ற இரவு இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (தொழுகையில் இது வரை முன்னோக்கித் வந்த பைத்துல் மக்திஸைவிட்டு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, (மக்களே!) கஅபாவையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள்’ என்று கூறினார். அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக்கொண்டார்கள்.
Book : 65
بَابُ {وَلَئِنْ أَتَيْتَ الَّذِينَ أُوتُوا الكِتَابَ بِكُلِّ آيَةٍ مَا تَبِعُوا قِبْلَتَكَ} [البقرة: 145] إِلَى قَوْلِهِ: {إِنَّكَ إِذًا لَمِنَ الظَّالِمِينَ} [البقرة: 145]
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
بَيْنَمَا النَّاسُ فِي الصُّبْحِ بِقُبَاءٍ، جَاءَهُمْ رَجُلٌ فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَأُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الكَعْبَةَ، أَلاَ فَاسْتَقْبِلُوهَا، وَكَانَ وَجْهُ النَّاسِ إِلَى الشَّأْمِ، فَاسْتَدَارُوا بِوُجُوهِهِمْ إِلَى الكَعْبَةِ»
சமீப விமர்சனங்கள்