தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4515

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அந்த மனிதர், ‘அலீ(ரலி) அவர்களைக் குறித்தும், உஸ்மான்(ரலி) அவர்களைக் குறித்தும் உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டார்.
இப்னு உமர்(ரலி), ‘உஸ்மான்(ரலி) அவர்களை (அன்னார் உஹுதுப் போரின்போது வெருண்டோடியதற்காக) அல்லாஹ்வே மன்னித்துவிட்டான். ஆனால், அல்லாஹ் அவரை மன்னிப்பதை நீங்கள் தாம் விரும்பவில்லை. அலீ(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் புதல்வரும், நபி(ஸல்) அவர்களின் மருமகனுமாவார்’ என்று கூறியவாறே, ‘(நபியவர்களின் வீடுகளுக்கு மிக நெருக்கத்தில்) நீங்கள் காண்கிறீர்களே இதுதான் அலீ அவர்களின் வீடாகும்’ என்று தம் கையால் சைகை செய்தபடி கூறினார்கள்.
Book :65

(புகாரி: 4515)

قَالَ: فَمَا قَوْلُكَ فِي عَلِيٍّ وَعُثْمَانَ؟ قَالَ: «أَمَّا عُثْمَانُ فَكَأَنَّ اللَّهَ عَفَا عَنْهُ، وَأَمَّا أَنْتُمْ فَكَرِهْتُمْ أَنْ تَعْفُوا عَنْهُ، وَأَمَّا عَلِيٌّ فَابْنُ عَمِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَخَتَنُهُ» وَأَشَارَ بِيَدِهِ، فَقَالَ: «هَذَا بَيْتُهُ حَيْثُ تَرَوْنَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.