தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4537

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் 46 இப்ராஹீம் (இறைவனை நோக்கி,) இறைவா! மரித்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டு! எனக் கூறிய போது, அவன், நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? என்று கேட்டான். (அதற்கு) ஆம்! ஆயினும் என் உள்ளம் நிம்மதியடைவதற்காகவே கேட்கிறேன் என்று அவர் கூறினார். (அதற்கு இறைவன்) நான்கு பறவைகளைப் பிடித்து, அவற்றை உங்களிடம் வைத்து(ப் பல துண்டுகளாக்கி) பின்னர் அவற்றில் ஒவ்வொரு பாகத்தை, ஒவ்வொரு மலையின் மீது வைத்து விட்டு அவற்றை நீங்கள் அழையுங்கள்! அவை உங்களிடம் விரைந்து வந்து சேரும். திண்ணமாக அல்லாஹ், வல்லோனும் நுண்ணறிவு உள்ளோனுமாக இருக்கின்றான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் என்றான் (எனும்2:260 ஆவது இறைவசனம்). (இவ்வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ஸுர்ஹுன்ன (அவற்றை உங்களிடம் வைத்து) எனும் சொல்லுக்கு அவற்றைப் பல துண்டுகளாக்கி என்று பொருள்.
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(இறந்தவற்றுக்க அல்லாஹ் எப்படி உயிரூட்டிகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்களை விடவும் நாமே சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (எனவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை.) ஏனெனில், ‘என் இறைவா! மரித்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கிறாய் என்று எனக்குக் காட்டு’ என்று அன்னார் கேட்டார்கள். இறைவன், ‘நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?’ என்று கேட்டான். அதற்கு அவர்கள், ‘ஆம்! ஆயினும் என் உள்ளம் நிம்மதியடைவதற்காகவே கேட்கிறேன்’ என்று பதிலளித்தார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 65

(புகாரி: 4537)

بَابُ {وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي المَوْتَى} [البقرة: 260]

{فَصُرْهُنَّ} [البقرة: 260]: قَطِّعْهُنَّ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَسَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«نَحْنُ أَحَقُّ بِالشَّكِّ مِنْ إِبْرَاهِيمَ»، إِذْ قَالَ: {رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي المَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي} [البقرة: 260]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.