பாடம் : 17 திண்ணமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு-பகல் மாறி, மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன எனும் (3:190ஆவது) இறைவசனம்.
இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
(ஒரு நாள்) நான் என் சிறிய தாயார் (அவர்களும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் இரவு தங்கியிருந்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் துணைவியாருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு உறங்கிவிட்டார்கள். இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி வந்தபோது (எழுந்து) அமர்ந்துகொண்டு வானத்தை நோக்கியவாறு ‘நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு – பகல் மாறி, மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன’ எனும் (திருக்குர்ஆன் 03:190 வது) வசனத்தை ஓதினார்கள். பின்னர் எழுந்து (சென்று) உளு (அங்க சுத்தி) செய்தார்கள்; பல் துலக்கினார்கள். பதினொன்று ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு பிலால்(ரலி) பாங்கு சொன்னபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று (மக்களுடன்) ‘சுப்ஹு’ தொழுதார்கள்.
Book : 65
بَابُ قَوْلِهِ: {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ وَاخْتِلاَفِ اللَّيْلِ وَالنَّهَارِ لآيَاتٍ لِأُولِي الأَلْبَابِ}
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ، فَتَحَدَّثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ أَهْلِهِ سَاعَةً، ثُمَّ رَقَدَ، فَلَمَّا كَانَ ثُلُثُ اللَّيْلِ الآخِرُ، قَعَدَ فَنَظَرَ إِلَى السَّمَاءِ، فَقَالَ: {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ وَاخْتِلاَفِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الأَلْبَابِ}، ثُمَّ «قَامَ فَتَوَضَّأَ وَاسْتَنَّ فَصَلَّى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً»، ثُمَّ أَذَّنَ بِلاَلٌ، «فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ»
சமீப விமர்சனங்கள்