பாடம் : 18 அவர்கள் நின்றவர்களாகவும், அமர்ந்தவர் களாகவும், ஒருக்களித்துப்படுத்தவர் களாகவும் அல்லாஹ்வை நினைக்கிறார்கள். மேலும், வானங்கள் மற்றும் பூமியின் படைப்புக் குறித்துச் சிந்திக்கின்றார்கள். (சிந்தித்து விட்டு இவ்வாறு பிரார்த்திக்கின் றார்கள்:) எங்கள் இரட்சகனே! இதை (யெல்லாம்) நீ•வீணாகப் படைக்கவில்லை. நீ தூயவன். எனவே, நரக வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாயாக! (எனும்3:191ஆவது இறைவசனம்.)
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(ஒரு நாள்) நான் என் சிறிய தாயார் (அவர்களும் நபி(ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா(ரலி) வீட்டில் இரவு தங்கினேன். அப்போது நான் ‘நிச்சயம் (இன்று) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (இரவுத்) தொழுகையை பார்ப்பேன்’ என்று சொல்லிக் கொண்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தலையணையொன்று போடப்பட்டது. அவர்கள் அதன் நீள வாட்டில் (தலை வைத்து) உறங்கினார்கள். அவர்கள் (விழித்தெழுந்து) தம் முகத்திலிருந்து தூக்க(க் கலக்க)த்தைக் துடைக்கலானார்கள். பிறகு (குர்ஆனின் 3 வது அத்தியாயமான) ஆலுஇம்ரானிலிருந்து கடைசிப்பத்து வசனங்களை ஓதி முடித்தார்கள். பிறகு (கட்டித்) தொங்க விடப்பட்டிருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று, அதை எடுத்து ‘உளு’ (அங்கசுத்தி) செய்தார்கள். பிறகு தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்ததைப் போன்றே செய்தேன். பிறகு சென்று அவர்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் (வலக்) கரத்தை என் தலை மீது வைத்தார்கள். பிறகு, என் காதைப் பிடித்துத் திருக் (உஷார்படுத்தி)னார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மீண்டும் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மீண்டும் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மீண்டும் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் தொழுதுவிட்டு, பிறகு ‘வித்ர்’ தொழுதார்கள்.
Book : 65
بَابُ {الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ، وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ}
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ، فَقُلْتُ: لَأَنْظُرَنَّ إِلَى صَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَطُرِحَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وِسَادَةٌ، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طُولِهَا، فَجَعَلَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ، ثُمَّ «قَرَأَ الآيَاتِ العَشْرَ الأَوَاخِرَ مِنْ آلِ عِمْرَانَ، حَتَّى خَتَمَ ثُمَّ أَتَى شَنًّا مُعَلَّقًا، فَأَخَذَهُ فَتَوَضَّأَ ثُمَّ قَامَ يُصَلِّي فَقُمْتُ فَصَنَعْتُ مِثْلَ مَا صَنَعَ، ثُمَّ جِئْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ فَوَضَعَ يَدَهُ عَلَى رَأْسِي، ثُمَّ أَخَذَ بِأُذُنِي فَجَعَلَ يَفْتِلُهَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ أَوْتَرَ»
சமீப விமர்சனங்கள்