தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4588

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அபீ முலைக்கா (அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்.

இப்னுஅப்பாஸ் (ரலி), ‘எந்த உத்தியையும் கையாளமுடியாமல், எந்த வழியும் தெரியாமல் பலவீனமான நிலையில் இருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர’ எனும் (திருக்குர்ஆன் 04:98 வது) இறைவசனத்தை ஓதிவிட்டு, ‘(ஹிஜ்ரத் செய்ய இயலாததால்) அல்லாஹ் மன்னிப்பளித்த (பலவீனமான)வர்களில் நானும் என் தாயாரும் இருந்தோம்’ என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 04:90 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹஸிரத்’ (மனம் ஒப்பாது) எனும் சொல்லுக்கு, ‘(அவர்களின் உள்ளங்கள் இடம் கொடுக்காமல்) குறுகிக் கொண்டன’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:135 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தல்வூ’ (தவறாக சாட்சியம் கூறினால்) எனும் சொல்லுக்கு ‘நீங்கள் (உண்மைக்குப் புறம்பாக) சாட்சியம் சொல்ல நாக்கைச் சுழற்றினால்’ என்று பொருள்.

மற்றவர்கள் கூறுகின்றனர்:

(திருக்குர்ஆன் 04:100 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முராஃகம்’ எனும் சொல்லுக்கு ‘ஹிஜ்ரத் செல்லுமிடம்’ (தஞ்சம் புகுமிடம்) என்று பொருள். (இதன் இறந்த கால வினைச் சொல்லான) ‘ராஃகம்த்து’ எனும் சொல்லுக்கு ‘நான் என் சமுதாயத்தைத் துறந்துவிட்டேன்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 04:103 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்கூத்’ எனும் சொல்லுக்கு ‘அவர்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட (கடமை)’ என்று பொருள்.
Book :65

(புகாரி: 4588)

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ

أَنَّ ابْنَ عَبَّاسٍ، تَلاَ {إِلَّا المُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالوِلْدَانِ} [النساء: 98]، قَالَ: «[ص:47] كُنْتُ أَنَا وَأُمِّي مِمَّنْ عَذَرَ اللَّهُ»

وَيُذْكَرُ عَنْ ابْنِ عَبَّاسٍ {حَصِرَتْ} [النساء: 90]: ضَاقَتْ

، {تَلْوُوا} [النساء: 135]: أَلْسِنَتَكُمْ بِالشَّهَادَةِ

وَقَالَ غَيْرُهُ: ” المُرَاغَمُ: المُهَاجَرُ، رَاغَمْتُ: هَاجَرْتُ قَوْمِي. {مَوْقُوتًا} [النساء: 103]: مُوَقَّتًا وَقْتَهُ عَلَيْهِمْ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.