தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4593

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 பராஉ (ரலி) அறிவித்தார்.

‘இறை நம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 04:95 வது) இறைவசனம் அருளப்பட்டபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அழைக்க அவர் (வந்து) அதனை எழுதினார். அப்போது இப்னு உம்மி மக்த்தூம்(ரலி) வந்து தம் ஊனத்தைப் பற்றி முறையிட்டார். அப்போதுதான் அல்லாஹ் ‘இடையூறு உள்ளவர்களைத் தவிர’ எனும் சொற்றொடரை அருளினான்.
Book :65

(புகாரி: 4593)

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ البَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ

لَمَّا نَزَلَتْ: {لاَ يَسْتَوِي} [النساء: 95] القَاعِدُونَ مِنَ المُؤْمِنِينَ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْدًا فَكَتَبَهَا، فَجَاءَ ابْنُ أُمِّ مَكْتُومٍ فَشَكَا ضَرَارَتَهُ ” فَأَنْزَلَ اللَّهُ: (غَيْرَ أُولِي الضَّرَرِ)





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.