தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4602

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்த்தட்டிலேயே இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவியாளர் எவரையும் ஒரு போதும் நீங்கள் காணமாட்டீர்கள் (எனும் 4:145ஆவது வசனம்). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அத் தர்க்குல் அஸ்ஃபல் எனும் சொல்லுக்கு நரகத்தின் கீழ்த்தட்டுஎன்று பொருள். (6:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நஃபக் (சுரங்கப் பாதை) எனும் சொல்லுக்கு வழி என்று பொருள்.

 அஸ்வத் இப்னு யஸீத் அந்நகஈ(ரஹ்) கூறினார்.

நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் அவையில் இருந்தோம். அப்போது ஹுதைஃபா(ரலி) வந்து எங்கள் அருகே நின்று சலாம் (முகமன்) கூறினார்கள். பிறகு, ‘உங்களைவிடச் சிறந்த கூட்ட(த்தாரான நபிகளார் கால)த்தவர் மத்தியிலேகூட நயவஞ்சகம் இறக்கிவைக்கப்(பட்டு சோதிக்கப்)பட்டது என்று கூறினார்கள். நான், ‘சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூய்மையானவன்.) ‘நயவஞ்சகர்கள் நரகத்தின் கீழ்த்தட்டில் இருப்பார்கள்’ என்று அல்லாஹ் கூறுகிறானே’ என்று சொல்ல, அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) புன்னகைத்தார்கள்.

ஹுதைஃபா(ரலி) பள்ளி வாசலின் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டார்கள். அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) எழுந்து நிற்க, அவர்களின் தோழர்கள் கலைந்து சென்றார்கள். உடனே, ஹுதைஃபா(ரலி) பொடிக் கற்களை என் மீது எறிந்(து என்னை அழைத்)தார்கள். நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘நான் அப்துல்லாஹ்வின் சிரிப்பைக் கண்டு வியப்படைந்தேன். ஆனால், நான் சொன்னதை அவர்கள் நன்கு அறிந்துகொண்டார்கள். உங்களை விடச் சிறந்தவர்களாயிருந்த ஒரு சமுதாயத்தினர் மீதும் நயவஞ்சகம் இறக்கிவைக்கப்பட்டது. பிறகு அவர்கள் பாவமன்னிப்புக் கோரினர்; அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்துவிட்டான்’ என்றார்கள்.

Book : 65

(புகாரி: 4602)

بَابُ (إِنَّ المُنَافِقِينَ فِي اَلدَّرَكِ الأَسْفَلِ مِنَ النَّارِ)

وَقَالَ ابْنُ عَبَّاسٍ: ” أَسْفَلَ النَّارِ، {نَفَقًا} [الأنعام: 35]: سَرَبًا

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنِ الأَسْوَدِ، قَالَ

كُنَّا فِي حَلْقَةِ عَبْدِ اللَّهِ فَجَاءَ حُذَيْفَةُ حَتَّى قَامَ عَلَيْنَا فَسَلَّمَ، ثُمَّ قَالَ: «لَقَدْ أُنْزِلَ النِّفَاقُ عَلَى قَوْمٍ خَيْرٍ مِنْكُمْ»، قَالَ الأَسْوَدُ: سُبْحَانَ اللَّهِ إِنَّ اللَّهَ يَقُولُ: (إِنَّ المُنَافِقِينَ فِي اَلدَّرَكِ الأَسْفَلِ مِنَ النَّارِ)، فَتَبَسَّمَ عَبْدُ اللَّهِ، وَجَلَسَ حُذَيْفَةُ فِي نَاحِيَةِ المَسْجِدِ، فَقَامَ عَبْدُ اللَّهِ فَتَفَرَّقَ أَصْحَابُهُ، فَرَمَانِي بِالحَصَا، فَأَتَيْتُهُ، فَقَالَ حُذَيْفَةُ: «عَجِبْتُ مِنْ ضَحِكِهِ، وَقَدْ عَرَفَ مَا قُلْتُ، لَقَدْ أُنْزِلَ النِّفَاقُ عَلَى قَوْمٍ كَانُوا خَيْرًا مِنْكُمْ ثُمَّ تَابُوا، فَتَابَ اللَّهُ عَلَيْهِمْ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.