தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4605

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 (நபியே!) கலாலா (-அதாவது மூல வாரிசுகளோ, கிளை வாரிசுகளோ இல்லாத நிலை-)பற்றி உம்மிடம் அவர்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள். (அவர்களிடம்) கூறுக: கலாலா பற்றி அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) தீர்ப்பளிக்கின்றான்: குழந்தை இல்லாத ஒருவன் இறந்து, அவனுக்கு ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால்,அவன் விட்டுச்சென்ற(சொத்)தில் பாதி அவளுக்குக் கிடைக்கும். குழந்தை இல்லாத ஒருத்தி (இறந்து,அவளுக்கு ஒரு சகோதரன் மட்டும் இருந்தால் அவளு)க்கு அவன் (முழு) வாரிசா வான். சகோதரிகள் இருவராக இருந்தால் அவ்விருவருக்கும் அவன் விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரு பங்கு கிடைக்கும். சகோதர சகோதரிகளாகப் பலர் இருந்தால் அவர்களில் இரு பெண்களின் பங்குக்குச் சமமான(பங்கான)து ஓர் ஆணுக்குக் கிடைக்கும் (எனும் 4:176ஆவது வசனத் தொடர்). (இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள) கலாலா எனும் சொல், யாருக்கு வாரிசாகத் தந்தையோ, மகனோ இல்லையோ அவரைக் குறிக்கும். இது தகல்லலஹுந் நஸபு (வமிசாவளி அற்றவன்) எனும் வினைச் சொல்லின் வேர்ச் சொல்லாகும்.

 (நபி (ஸல்) அவர்களுக்கு) இறுதியாக அருளப்பெற்ற (குர்ஆன்) அத்தியாயம் பாராஅத் எனும் (9ஆவது) அத்தியாயமாகும். (பாகப்பிரிவினை தொடர்பாக) இறுதியாக இறங்கிய வசனம் (நபியே*) உங்களிடம் மக்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள் எனும் (இந்த 4-176 ஆவது) வசனமாகும்.

Book : 65

(புகாரி: 4605)

بَابُ {يَسْتَفْتُونَكَ قُلْ: اللَّهُ يُفْتِيكُمْ فِي الكَلاَلَةِ إِنِ امْرُؤٌ هَلَكَ لَيْسَ لَهُ

وَلَدٌ، وَلَهُ أُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ، وَهُوَ يَرِثُهَا إِنْ لَمْ يَكُنْ لَهَا وَلَدٌ} [النساء: 176] ” وَالكَلاَلَةُ: مَنْ لَمْ يَرِثْهُ أَبٌ أَوِ ابْنٌ، وَهُوَ مَصْدَرٌ مِنْ تَكَلَّلَهُ النَّسَبُ

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ البَرَاءَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

آخِرُ سُورَةٍ نَزَلَتْ بَرَاءَةَ، وَآخِرُ آيَةٍ نَزَلَتْ: {يَسْتَفْتُونَكَ قُلْ: اللَّهُ يُفْتِيكُمْ فِي الكَلاَلَةِ} [النساء: 176]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.