ஸஃப்வான் பின் ஸுலைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு முஃமின் கோழையாக இருப்பானா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள். ஒரு முஃமின் கஞ்சனாக இருப்பானா? எனக் கேட்கப்பட்டது. அதற்கும் அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள். ஒரு முஃமின் பொய் சொல்பவனாக இருப்பானா? எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “இல்லை” என்று பதிலளித்தார்கள்.
(shuabul-iman-4472: 4472)أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ، أنا أَبُو الْحُسَيْنِ الطَّرَائِفِيُّ، نا عُثْمَانُ بْنُ سَعِيدٍ، نا الْقَعْنَبِيُّ، فِيمَا قَرَأَ عَلَى مَالِكٍ، عَنْ صفْوَانَ بْنِ سُلَيْمٍ،
أَنَّهُ قِيلَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا؟ قَالَ: ” نَعَمْ ” قِيلَ: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلًا؟ قَالَ: ” نَعَمْ ” فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا؟ قَالَ: ” لَا “
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-4472.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-4466.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி ஸஃப்வான் பின் ஸுலைம் நபித்தோழர் அல்ல. தாபிஈ ஆவார். எனவே இந்த செய்தி முர்ஸல் என்பதால் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- மேலும் இப்னு அப்தில்பர் அவர்கள் இந்த செய்தி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆதாரப்பூர்வமான செய்தி எனக்கு கிடைக்கவில்லை. இந்த செய்தி முர்ஸலான, ஹஸன் தரத்தில் உள்ள செய்தி என்று கூறியுள்ளார். (நூல்: அல்இஸ்தித்கார் 27/353)
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இந்த செய்தியை முஃளல் என்று கூறியுள்ளார். (நூல்: தக்ரீஜ் மிஷ்காத்)
மேலும் பார்க்க: மாலிக்-2832 .
Salam, ஹதீஸின் தரம்: ஸஹீஹ் – பலமான செய்தி. Please confirm if it is weak or authentic.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா. தரம் மாற்றப்பட்டுள்ளது.